MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • திரிஷாவை விடாது கருப்பாய் துரத்தும் மன்சூர் அலிகான்... ரூ.1 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு தொடுத்ததால் பரபரப்பு

திரிஷாவை விடாது கருப்பாய் துரத்தும் மன்சூர் அலிகான்... ரூ.1 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு தொடுத்ததால் பரபரப்பு

நடிகைகள் திரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் மீது நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Dec 09 2023, 09:10 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Mansoor Ali Khan , Trisha

Mansoor Ali Khan , Trisha

சரக்கு படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. அவரின் இந்த கொச்சையான பேச்சுக்கு திரிஷா கண்டனம் தெரிவிக்க, திரையுலகினர் அனைவரும் மன்சூர் அலிகானுக்கு எதிராக கண்டனக் குரல்கள் எழுப்பினர். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Mansoor Alikhan

Mansoor Alikhan

இதையடுத்து மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்க முடியாது என கூறி வந்த மன்சூர் அலிகான், பின்னர் திடீரென மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டதை அடுத்து, நடிகை திரிஷாவுக்கு அவரை மன்னித்துவிட்டதாக கூறி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டார். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

34
Mansoor Alikhan case

Mansoor Alikhan case

மேலும் மன்சூர் அலிகான் மீது எந்தவித சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றும் காவல்நிலையத்துக்கு திரிஷா கடிதம் அனுப்பினார். இதையடுத்து மன்சூர் அலிகான் - திரிஷா இடையேயான பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டது என அனைவரும் எண்ணி வந்த நிலையில், அதில் திடீர் டுவிஸ்ட் ஒன்றை கொடுத்தார் மன்சூர் அலிகான். அவர் தான் திரிஷாவிடம் மரணித்துவிடு என்று சொன்னதை மன்னித்துவிடு என தவறாக சொல்லிவிட்டார்கள் என சொல்ல இந்த விஷயம் மீண்டும் பரபரப்பை கிளப்பியது.

44
Mansoor Ali Khan defamation case

Mansoor Ali Khan defamation case

இந்த நிலையில், இந்த பிரச்சனையை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றுள்ள மன்சூர் அலிகான், சென்னை உயர்நீதிமன்றத்தில் திரிஷா மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். தான் பேசிய முழு வீடியோவையும் பார்க்காமல் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக குற்றம் சாட்டிய மன்சூர் அலிகான், திரிஷா ஒரு கோடி ரூபாய் தர வேண்டும் என கூறி உள்ளார். இதேபோன்று இந்த விவகாரத்தில் திரிஷாவுக்கு ஆதரவாக பேசிய நடிகை குஷ்பு, நடிகர் சிரஞ்சீவியும் தனக்கு ரூ.1 கோடி தர வேண்டும் என கோரி மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு வருகிற திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது.

இதையும் படியுங்கள்... ப்ளீஸ் லேடி சூப்பர்ஸ்டார்னு கூப்பிட வேண்டாம்... பயங்கரமா திட்றாங்க - பட்டத்தை பார்த்து பயப்படும் நயன்தாரா

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சென்னை உயர் நீதிமன்றம்
குஷ்பூ
திரிஷா

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved