Lakshmika Sajeevan Death: அதிர்ச்சி!! 24 வயது இளம் நடிகை மாரடைப்பால் மரணம்..!
24 வயதே ஆகும் மலையாள நடிகை சஜேவன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலையாளத்தில் வெளியான 'காக்கா' குறும்படத்தின் மூலம் கவனம் பெற்றவர் நடிகை லஷ்மிகா சஜேவன். நடிப்பை தன்னுடைய பேஷனாக வைத்திருந்த இவர், ஷார்ஜாவில் உள்ள வாங்கி ஒன்றில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் வேலை செய்து கொண்டிருந்த நிறுவனத்தில் மயங்கி விழுந்து மரணமடைந்தார். இதை தொடர்ந்து மருத்துவ பரிசோதனையில், மாரடைப்பு தான் லஷ்மிகா மரணத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தற்போது ஒட்டு மொத்த திரையுலகத்தையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01hh4wjb42sdhwp2y1xx0vx90e/Lakshmika-Sajeevan7-1702044970114_300x399xt.jpg)
லஷ்மிகா சஜேவன் நடித்த 'காக்கா' குறும்படம் கடந்த ஏப்ரல் 2021-ல் வெளியானது. இதில் பஞ்சமி என்ற கதாநாயகி கதாபாத்திரத்தில் லக்ஷ்மிகா நடித்திருந்தார். நிற வேறுபாடு காரணமாக ஒதுக்கப்பட்டவர்களின் கதையைச் சொன்ன இப்படம் விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்டது. லக்ஷ்மிகா கருமை நிறமுள்ள, பல் நீளமாக இருக்கும் பெண்ணாக பஞ்சமி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
15 கோடி செக் மோசடி..! பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம்!
Malayalam Actress lakshmika sajeevan Death
காக்கா குறும்படம்... பஞ்சமியை அவரது தோற்றத்தால் குடும்ப உறுப்பினர்களால் கூட ஒதுக்கி வைக்கப்படும் நிலையில், அதையெல்லாம் நேர்மறையாக எடுத்துக்கொண்டு தைரியமாக எப்படி முன்னேறுகிறார் என்பதே இதன் கதைக்களம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
kakka short film actress lakshmika sajeevan passed away nrn
இந்த குறும்படத்தை தொடர்ந்து மலையாள சினிமாவிலும் லக்ஷ்மிகா தனது இருப்பை வெளிப்படுத்தினார். யமண்டன் பிரேமகதா, பஞ்சவர்ணத்தத்தா, சவுதி வெள்ளக்கா, புழையம்மா, உயரே, ஒரு குட்டநாடன் வலைப்பதிவு, நித்யஹரித நாயகன் போன்ற படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து கைதட்டல் பெற்றார் லக்ஷ்மிகா. இவரின் இந்த திடீர் மரணம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.