தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர் பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன், இவர் செக் மோசடியில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
நடிகரும், மருத்துவருமான பவர்ஸ்டார் சீனிவாசன் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான 'லத்திகா' என்ற திரைப்படத்தின் மூலம் கோலிவுட் திரை உலகில் நடிகராக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தில் சந்தானத்துடன் காமெடி வேடத்தில் நடித்தார். இந்த திரைப்படம் இவருக்கு திரையுலகில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, அடுத்தடுத்து பல படங்களில் காமெடி வேடத்திலும்... சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடிக்கும் அளவுக்கு உயர்ந்தார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்நிலையில் சீனிவாசன் 15 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி, இறால் பண்ணை அதிபரை ஏமாற்றி செக் மோசடி செய்துளளர். இது குறித்து அந்த இறால் பண்ணை உரிமையாளர் தொடுத்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஏற்கனவே இரண்டு முறை பவர்ஸ்டார் சீனிவாசன் ஆஜராகாத நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தற்போது பவர் ஸ்டாருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

மேலும் ஜனவரி 2ஆம் தேதிக்குள், நீதிமன்றத்தில் சீனிவாசனை ஆஜர் படுத்த வேண்டும் என சென்னை அண்ணாநகர் போலீசாருக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
