துருக்கி சென்ற தளபதி 68 படக்குழு.. பிரபல யங் நடிகை படத்தில் இணைகிறாராம்? - எல்லாம் லவ் டுடே செய்த மாயம் தான்!
Young Actress Joins Thalapathy 68 Movie : தளபதி விஜய்க்கு இந்த ஆண்டு ஒரு மிகச் சிறந்த ஆண்டாக அமைய காரணமாக இருந்தது லியோ திரைப்படம் என்று கூறினால் அது மிகையல்ல. இந்நிலையில் அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து முதல் முறையாக பிரபல இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இணைந்து தனது 68வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் தளபதி விஜய்.
Leo Movie
லியோ திரைப்படம் படபிடிப்பில் இருந்தபொழுதே தளபதி 68 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பிரபல நடிகர் தல அஜித் அவர்களை இயக்கி ஹிட் கொடுத்த வெங்கட் பிரபு, தளபதி விஜய் அவர்களுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருந்து வந்தார்.
Thalapathy 68 Pooja
கடந்த மாதம் சென்னையில் இந்த படத்திற்கான பூஜை போடப்பட்டு அன்றைய தினமே இந்த படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்று படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர்கள் மற்றும் நடிகைகள் பிரபுதேவா, பிரசாந்த், லைலா மற்றும் சினேகா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பல ஆண்டுகள் களைத்து ஸ்னேகா, விஜயுடன் இணைந்து நடிக்கின்றார்.
Actress Sneha
இந்நிலையில் இந்த பட பணிகளை தாய்லாந்தில் முடித்த தளபதி விஜய் அவர்கள் சென்னை திரும்பினார். இதனையடுத்து தளபதி 68 பட குழு தற்பொழுது துருக்கி நாட்டில் அடுத்த கட்ட படப்பிடிப்பு பணிகளை நடத்தி வருகிறது. தளபதி விஜய் நடிப்பில் வெளியாகும், பல நாடுகளில் உருவாக்கப்படும் திரைப்படமாக இது அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Ivana
இந்த திரைப்படத்தில் பிரபல நடிகை மீனாட்சி சவுத்ரி தளபதி விஜய் அவர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் நிலையில், இந்த படத்தில் மற்றொரு இளம் நாயகி இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் இப்படத்தில் தளபதி விஜய் அவர்களுடைய தங்கையாக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. அவர் வேறு யாரும் அல்ல நாச்சியார் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமாகி, லவ் டுடே நீக்கிதாவாக இன்று புகழ் பெற்றிருக்கும் நடிகை இவானா தான். ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.