அடேங்கப்பா நயனின் கணவர் விக்னேஷ் சிவன் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? செம்ம வெயிட்டு பார்ட்டியா இருக்காரேப்பா!
நடிகை நயன்தாராவின் கணவரும், தமிழ் சினிமாவில் பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக வலம் வருபவருமான விக்னேஷ் சிவனின் சொத்து மதிப்பு பற்றி பார்க்கலாம்.
Nayanthara Husband Vignesh shivan
தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடி கடந்த 2015-ம் ஆண்டு வெளியான நானும் ரெளடி தான் படத்தின் ஷூட்டிங் சமயத்தில் காதலிக்க தொடங்கினர். இதையடுத்து 7 ஆண்டுகள் உருகி உருகி காதலித்து வந்த இந்த ஜோடிக்கு கடந்தாண்டு ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு உயிர், உலக் என இரட்டை ஆண்குழந்தைகளும் உள்ளனர்.
nayanthara, vignesh shivan
நடிகை நயன்தாரா பொறுத்தவரை அவர்தான் தென்னிந்தியாவின் பணக்கார நடிகை என்பது அனைவரும் அறிந்ததே. அவருக்கு சுமார் ரூ.165 கோடி சொத்துக்கள் உள்ளன. இதுதவிர எக்கச்சக்கமான தொழில்களிலும் முதலீடு செய்து நடத்தி வருகிறார் நயன்தாரா. அதுமட்டுமின்றி இவர் சொந்தமாக ஒரு ஜெட் விமானத்தையும் வைத்திருக்கிறார். தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் நயன்தாரா தான் முதலிடத்தில் உள்ளார்.
Director Vignesh shivan
இப்படி நயன்தாரா பற்றியும் அவரின் சொத்து மதிப்பு பற்றியும் அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் அவரது கணவர் விக்னேஷ் சிவனின் சொத்து மதிப்பு என்ன என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவரின் சொத்து மதிப்பு பற்றி தற்போது பார்க்கலாம். விக்னேஷ் சிவன் போடா போடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவர் சினிமாவில் இயக்குனராக மட்டுமின்றி பாடலாசிரியராகவும் தன்னுடைய முத்திரையை பதித்திருக்கிறார்.
Vignesh shivan Salary
இவர் அஜித், விஜய், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் பாடல்கள் எழுதி இருக்கிறார். இவர் ஒரு பாடல் எழுத 1 முதல் 3 லட்சம் வரை சம்பளமாக வாங்கி வருகிறாராம். அதுமட்டுமின்றி இயக்குனராகவும் நானும் ரெளடி தான், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்துள்ள விக்னேஷ் சிவன் ஒரு படத்துக்கு ரூ.3 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறாராம். விக்னேஷ் சிவன் அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனை வைத்து ஒரு படம் இயக்க உள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
vignesh shivan at chess olympiad
விக்னேஷ் சிவன் சினிமாவை தாண்டி சில பிரம்மாண்ட ஈவண்ட்களையும் வெற்றிகரமாக நடத்திக் கொடுத்துள்ளார். கடந்த ஆண்டு தமிழகத்தில் அரசு சார்பில் நடத்தப்பட்ட செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தொடக்க மற்றும் இறுதி விழா, அதற்கான ஆல்பம் பாடல் ஆகியவை இயக்கியது விக்னேஷ் சிவன் தான். குறிப்பாக சென்னையில் உள்ள பழமையான நேப்பியர் பாலத்தை செஸ் போர்டு போல் வெள்ளை மற்றும் கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்து அது வேறலெவலில் டிரெண்ட் ஆனது அந்த ஐடியாவை கொடுத்தது விக்னேஷ் சிவன் தான்.
vignesh shivan business
அதோடு செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது, அதில் உலகத்தரம் வாய்ந்த கலைஞர்கள் உதவியுடன் வியத்தகு கலை நிகழ்ச்சிகளை நடத்தி முதல்வரின் பாராட்டுக்களையும் பெற்றார் விக்கி. இந்நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி கொடுத்ததற்காக விக்னேஷ் சிவனுக்கு கோடிக்கணக்கில் சம்பளமும் வழங்கப்பட்டது.
Vignesh shivan net worth
சினிமாவுக்கு அடுத்தபடியாக பிசினஸ் மூலமும் விக்னேஷ் சிவனுக்கு கோடிக்கணக்கில் லாபம் கிடைத்து வருகிறது. இவர் ரெளடி பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நயன்தாரா உடன் சேர்ந்து நடத்தி வருகிறார். அதுமட்டுமின்றி 9ஸ்கின் என்கிற நிறுவனத்திலும் விக்கி பங்குதாரராக உள்ளார். இதோடு தி டிவைன் புட்ஸ் என்கிற நிறுவனத்திலும் விக்கி முதலீட்டாளராக உள்ளார். இது விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து விற்பனை செய்யும் நிறுவனம் ஆகும்.
vignesh shivan car collection
இப்படி எக்கச்சக்கமான தொழில்களை செய்து வரும் விக்னேஷ் சிவனின் சொத்து மதிப்பு ரூ.50 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி விலையுயர்ந்த ஃபெராரி சொகுசு காரையும் சொந்தமாக வைத்துள்ளார் விக்னேஷ் சிவன். அதன் மதிப்பு ரூ.6 கோடி இருக்குமாம். நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.200 கோடிக்கு மேல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... பிக்பாஸில் ரீ-என்ட்ரி கொடுத்ததும் போட்டியாளர்கள் முகத்தை அடித்து உடைத்த விஜய் வர்மா - லீக்கான வீடியோ இதோ