பிக்பாஸில் ரீ-என்ட்ரி கொடுத்ததும் போட்டியாளர்கள் முகத்தை அடித்து உடைத்த விஜய் வர்மா - லீக்கான வீடியோ இதோ
பிக்பாஸ் வீட்டில் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே சென்றுள்ள விஜய் வர்மா, சக போட்டியாளர்கள் பற்றிய உண்மைகளை புட்டு புட்டு வைத்த வீடியோ வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் முழுக்க பூகம்பம் என்கிற டாஸ்க் நடத்தப்பட்டது. இந்த டாஸ்க் பற்றி அறிவிக்கும்போதே, அதில் வெற்றிபெறாவிட்டால் என்ன நடக்கும் என்பதையும் அறிவித்தார் பிக்பாஸ். அதன்படி அவர் வைக்கும் மூன்று டாஸ்க்குகளில் தோல்வியுற்றால், ஏற்கனவே வெளியேறிய போட்டியாளர்கள் மூவர் பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே வருவார்கள் என்றும் அவர்கள் வந்தால் தற்போது நாமினேஷனில் இருக்கும் மூவர் வெளியேற்றப்படுவார்கள் எனவும் அறிவித்திருந்தார்.
பிக்பாஸின் இந்த அறிவிப்பால் ஷாக் ஆன போட்டியாளர்கள், கஷ்டப்பட்டு டாஸ்க்குகளில் ரிஸ்க் எடுத்து விளையாடியும் மூன்றில் ஒரு டாஸ்க்கில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது. மற்ற இரண்டு டாஸ்க்குகளில் தோல்வியுற்றதால், இந்த வாரம் இரண்டு பேர் எலிமினேட் ஆவது உறுதியானது. அதன் அடிப்படையில் இந்த வாரம் மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் குறைவான வாக்குகளை பெற்ற ஆர்.ஜே.பிராவோ மற்றும் அக்ஷயா ஆகியோர் எலிமினேட் ஆகினர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இதையடுத்து விஜய் வர்மா மற்றும் அனன்யா ராவ் ஆகியோர் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளனர். இதில் முதல் ஆளாக உள்ளே சென்ற விஜய் வர்மா, உள்ளே போனதும் போட்டியாளர்களுடன் டாஸ்க் ஒன்றை விளையாடினார். அந்த டாஸ்க்கில் வரிசையாக போட்டியாளர்களின் முகம் அடங்கிய மார்பில் கல்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அவற்றை ஒவ்வொன்றாக உடைத்து அவர்களைப் பற்றி வெளியே என்ன நினைக்கிறார்கள் என்பதை வெளிப்படையாக கூறி இருக்கிறார்.
முதலாவதாக டைட்டில் வின்னர் சரவண விக்ரம் என கிண்டலடித்து ஆரம்பித்த அவர், பின்னர் ரவீனா, மணி, பூர்ணிமா, ஜோவிகா, நிக்சன் என ஒவ்வொருவர் பற்றியும் சொல்கிறார். கடைசியாக நிக்சனிடம் நீ பொய் சொல்றதை உடைக்க வேண்டும் என நான் விரும்புகிறேன் என சொல்ல அனைவரும் ஷாக் ஆகின்றனர். இந்த வீடியோ காட்சி தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது.
இதையும் படியுங்கள்... தடுமாறும் சஞ்சய்... தாமதமாகும் முதல் படம்! விஜய் மகனுக்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்கா?