- Home
- Gallery
- Nayanthara: விக்னேஷ் சிவனுடன் லன்ச் டேட் சென்ற நயன்தாரா! மதிய நேரத்தில் கூட No பூவா! வெளியான ஃபிட்னஸ் சீக்ரெட்
Nayanthara: விக்னேஷ் சிவனுடன் லன்ச் டேட் சென்ற நயன்தாரா! மதிய நேரத்தில் கூட No பூவா! வெளியான ஃபிட்னஸ் சீக்ரெட்
நடிகை நயன்தாரா தன்னுடைய கணவருடன் லன்ச் டேட்டிங் சென்ற போது எடுத்து கொண்ட போட்டோஸ் மற்றும் வீடியோஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட, அது படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்தை தனதாக்கி கொண்டுள்ளவர் நயன்தாரா. 40 வயதை எட்டிய பின்னரும் 20 வயது இளம் ஹீரோயின் போல் இருக்கும் இவருடைய அழகின் சீக்ரெட் மற்றும், இவருடைய டயட் குறித்து தெரிந்து கொள்வதிலும் பல ரசிகர்கள் ஆர்வம் காட்டுவது வழக்கமான ஒன்று தான்.
ஆனால் நயன்தாரா தன்னுடைய டெய்லி லைஃப் ரொட்டின்... மற்றும் பழக்க வழக்கங்கள் குறித்து யாரிடமும் எதையும் பகிர்ந்து கொள்வதை விரும்ப மாட்டார்.
Dhanush: நண்பரின் பிறந்தநாளுக்கு புகைப்படம் வெளியிட்டு வாழ்த்து கூறிய தனுஷ்! வைரலாகும் போட்டோ!
ஆனால் தற்போது இவரின் மத்திய ஃபுட் ஹாபிட் குறித்த சில போட்டோஸ் மற்றும் வீடியோசை அவரை வெளியிட அது வைரலாகி வருகிறது.
கணவருடன் நட்சத்திர ஹோட்டலுக்கு மதிய உணவு சாப்பிட சென்றபோது... எடுக்கப்பட்டவை தான் இந்த போட்டோஸ். நயன்தாராவின் மதிய உணவில் பிரட் மற்றும் பல காய்கறிகள் கலந்த சால்ட் உள்ளதை பார்க்க முடிகிறது.
அதே போல் சலோமீன் சூப் போன்றவை இடம்பிடித்துள்ளது. ரியல் மாம்பழத்தினால் செய்யப்பட்ட ஜெல்லி கேக், சாக்கலேட் கேக்குகளும் இதில் அடங்கும்.
நயன்தாராவின் இந்த டயட் சாப்பாட்டை பார்த்து சில ரசிகர்கள், கோடி கணக்கில் பணம் இருந்தும்... இவரால் மதியத்தில் சாதம் சாப்பிட முடியவில்லை என்பதை கவலையோடு தெரிவித்து வருகிறார்கள். இந்த லன்ச் டயட்டுக்கு, தன்னுடைய குழந்தைகளை வீட்டிலே விட்டுவிட்டு, நயன் - விக்கி மட்டும் வந்து ஜோடியாக சாப்பிட்டு விட்டு சென்றுள்ளனர் என தெரிகிறது.
திருமணத்திற்கு பிறகும் படு பிஸியான நடிகையாக வலம் வரும் நயன்தாரா.... கூடிய விரைவில் வெளிநாட்டில் நடைபெற உள்ள 'டாக்சிக்' படத்தின் படப்பிடிப்பில் இணைவார் என கூறுகிறது. மேலும் டெஸ்ட், மண்ணாங்கட்டி என இவரின் கைவசமுள்ள 5-திற்கும் மேற்பட்ட படங்கள் உள்ளன. விக்கி பிரதீப் ரங்கநாதனை வைத்து "LIC' படத்தை இயக்கி முடித்துள்ள நிலையில், விரைவில் இப்படத்தின் அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.