நானு ரெகார்ட் மேக்கர் தான்.. கெத்து காட்டிய திரிஷா - "ஆஹா"வில் வேற லெவலில் ஹிட்டாகும் The Road திரைப்படம்!
Trisha The Road Movie : தமிழ் திரை உலகில் கடந்த 24 ஆண்டுகளாக பயணித்து வரும் ஒரு மிகச்சிறந்த நடிகை தான் திரிஷா. கடந்த 1999 ஆம் ஆண்டு பிரஷாந்த் நடிப்பில் வெளியான ஜோடி என்கின்ற திரைப்படத்தின் மூலம் இவர் திரையுலகில் அறிமுகமானார்.
The Road
தமிழில் மௌனம் பேசியதே, மனசெல்லாம், சாமி, லேசா லேசா மற்றும் அலை என்று தொடர்ச்சியாக பல திரைப்படங்கள் ஹிட் ஆன நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக மாறினார் திரிஷா என்றால் அது மிகையல்ல. தமிழ் திரை உலகில் கமல், ரஜினி, விஜய், அஜித், விக்ரம், சூர்யா என்று அத்தனை முன்னணி ஹீரோக்களுக்கும் இவர் ஜோடியாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
The Road Movie
இந்நிலையில் இந்த 2023 ஆம் ஆண்டு இயக்குனர் அருண் வசீகரன் இயக்கத்தில் கடந்த அக்டோபர் மாதம் ஆறாம் தேதி வெளியான "தி ரோடு" என்கின்ற திரைப்படத்தில் திரிஷா நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் திரிஷா தான் முன்னணிக் கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அருண் வசீகரன் இயக்கத்தில் ஒரு கிரைம் திரில்லர் திரைப்படமாக உருவான "தி ரோடு" திரைப்படத்தை AAA சினிமா நிறுவனம் தயாரித்து வழங்க சபீர் மற்றும் சந்தோஷ பிரதாப் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர்.
Actress Trisha Krishnan
தற்பொழுது இந்த திரைப்படம் AHA OTT தளத்தில் வெளியாகி உள்ளது, திரையரங்குகளில் வெற்றி பெற்றதை காட்டிலும் மிகப்பெரிய வெற்றியை தி ரோடு திரைப்படம் OTT தளத்தில் பெற்றுள்ளது என்றும் அந்த தளத்தில் இந்த திரைப்படம் வெளியான ஒரே நாளில் சுமார் 25 மில்லியன் காட்சி நிமிடங்கள் என்கின்ற மாபெரும் சாதனையை புரிந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.