நடிகை ராதா மகளுக்கு டும் டும் டும்; கணவராகும் காதலருடன் வெளியிட்ட ரொமான்டிக் பிக்ஸ்!!
Actress Karthika Nair : தமிழ் சினிமாவில் 80களின் தொடக்கத்தில் மிகச்சிறந்த நடிகையாக, பல முன்னணி நடிகர்களுக்கு நாயகியாக நடித்து வந்தவர் தான் ராதா. தற்பொழுது அவருடைய மகள் கார்த்திகா நாயர் திருமணத்திற்கு தயாராகி உள்ளார்.
Karthika Nair Marriage
கடந்த 2011 ஆம் ஆண்டு மறைந்த இயக்குனர் கே.வி. ஆனந்த் அவர்கள் இயக்கத்தில் வெளியான "கோ" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதையின் நாயகியாக களம் இறங்கியவர் தான் கார்த்திகா நாயர்.
Actress Karthika Marriage
இவர் பிரபல நடிகை ராதாவின் மகள் என்பது அனைவரும் அறிந்ததே தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் என்று நான்கு மொழிகளிலும் 9 திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். இறுதியாக தமிழில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான "புறம்போக்கு என்கின்ற பொதுவுடமை" என்ற திரைப்படத்தில் நடித்ததோடு தனது குறுகிய கால சினிமா வாழ்க்கைக்கு முடிவு கட்டினார் கார்த்திகா நாயர்.
Radha Daughter Karthika
இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் இவருடைய நிச்சயதார்த்தம் மிக மிக எளிமையான முறையில் நடந்தது. இந்த சூழலில் இன்று இவருக்கு திருமணம் நடக்க உள்ள நிலையில், தனது கணவருடன் அவர் எடுத்துக் கொண்ட ரொமாண்டிக்கான புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார்.