இருட்டில் லிப் லாக்... பாத்ரூமில் கொஞ்சல்! எனக்கு மாயா பற்றி முதலே தெரியும்! ஷாக் கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்
'பிக் பாஸ் சீசன் 7' நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில், பிரபல நடிகையும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான கஸ்தூரி, தற்போது நடந்து வரும் பிக் பாஸ் சீசன் 7 குறித்து ஆதங்கத்தோடு பேசி உள்ள தகவல் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கடந்த 6 பிக்பாஸ் சீசன்களை விட, பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி மிகவும் பரபரப்பாகவும், சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமலும் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர், பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்த தங்களுடைய கருத்தையூம் விமர்சனங்களையும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் சனம் ஷெட்டி, வனிதா விஜயகுமார், சுரேஷ் சக்ரவர்த்தி, போன்ற பிரபலங்கள் சிலர் ஊடகங்களில் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து ரிவ்யூ செய்து வரும் நிலையில், கஸ்தூரி அவ்வபோது பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து தன்னுடைய கருத்தை, வெளிப்படுத்தி வருவதையும் வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது இவர் கூறியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சீசன்களில் இல்லாத வகையில், பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் சில சொல்லமுடியாத விஷயங்கள் அரங்கேறி வருவதாகவும், இருட்டு நேரத்தில் லிப் லாக் கொடுப்பது, பாத்ரூமில் கொஞ்சுவது போன்ற விஷயங்கள் நடிக்கிறது. இந்த விஷயங்கள் மீடியாக்களில் காட்டப்படுவது இல்லை.
எனக்கு மாயா பற்றி ஏற்கனவே தெரியும், அவர் எப்படி பட்டவர் என்பது. ஆனால் கமல் அவர் எது செய்தாலும் அதனை பெரிதாக கண்டு கொள்வது இல்லை. நிக்சன் முன்பு மாயா உள்ளாடையை காட்டியது, காமெடி என கூறி நழுவி விட்டார். இது குறித்து கமல் கண்டித்திருக்க வேண்டாம். ஆனால் கண்டும்... காணாதது போல் இருந்து விட்டார் என பேசியுள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
பிரதீப் குறித்து பேசிய கஸ்தூரி, "பிரதீப் பண்ண விஷயம் அவரை மட்டும் அசிங்கப்படுத்தவில்லை. அவருடைய பெற்றோரையும் சேர்த்து தான் அசிங்கப்படுத்தி இருக்கிறது. ஆனால் இந்த விஷயம் பிரதீப்புக்கு புரியவில்லை என வேதனையோடு பேசியுள்ளார்.