SJ Suryah: நடிகரானதும் கோடிகளில் சம்பளம் வாங்கும்.. முரட்டு சிங்கிள் எஸ்.ஜே.சூர்யா Net Worth எவ்வளவு தெரியுமா?
தமிழ் சினிமாவில் தற்போது வெரைட்டியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து, கலக்கி கொண்டிருக்கும் நடிகரும், இயக்குனருமான, எஸ்.ஜே.சூர்யாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
SJ சூர்யாவுக்கு தற்போது 55 வயது ஆகும் நிலையில், திருமணம் செய்து கொள்ளாமல் தற்போது வரை முரட்டு சிங்கிளாகவே வலம் வந்து கொண்டிருக்கிறார். ஒரு துணை இயக்குனராக தன்னுடைய சினிமா பயணத்தை துவங்கிய இவர், இயக்குனர் பாண்டிய ராஜன், பாரதி ராஜா, வசந்த் உள்ளிட்ட பல இயக்குனர்களிடம் பணியாற்றியுள்ளார்.
ஆசை, உல்லாசம், போன்ற படங்களில் துணை இயக்குனராக பணியாட்டியபோது, அஜித்துடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக, தான் எழுதி வைத்திருந்த வாலி படத்தின் கதையை அவரிடம் கூறினார். கதையை கேட்டதுமே அஜித்துக்கு மிகவும் பிடித்து விட்டது. உடனடியாக ஓகே சொன்னார். பின்னர், இது எஸ்.ஜே.சூர்யாவின் முதல் படம் என்பதால் தயாரிப்பாளரையும் அஜித்தே ஏற்பாடு செய்து கொடுத்தார்.
Rajinikanth: ஷிகர் தவனுடன் கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசித்த சூப்பர் ஸ்டார்! வைரலாகும் புகைப்படம்!
எஸ்.ஜே.சூர்யாவும் தன்னுடைய முதல் படத்தை பெரிய நடிகர் - நடிகைகளை வைத்து இயக்கியது மட்டும் இன்றி, அஜித்துக்கு மிகப்பெரிய வெற்றியையும் பெற்று தந்தார். இப்படத்தின் வெற்றியால், அஜித் எஸ்.ஜே.சூர்யாவுக்கு புதிய கார் ஒன்றையும் பரிசாக வழங்கினார். அதே போல் தான் வாங்கிய முதல் படத்தின் அட்வான்சை வைத்து, தன்னுடன் பணியாற்றிய துணை இயக்குனர்கள் 14 பேருக்கு எஸ்.ஜே.சூர்யா பைக் வாங்கி கொடுத்தார்.
வாலியை தொடர்ந்து விஜய்யை வைத்து குஷி, படத்தை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா, நியூ படத்தில் இவரே ஹீரோவாகவும் மாறினார். இந்த படம் வெற்றியும் பெற்றது. பின்னர் அன்பே ஆரூயிரே, இசை ஆகிய படங்களை இயக்கி நடித்த எஸ்ஜே சூர்யா அந்த படங்களின் தோல்வியால் படம் இயக்குவதை விட்டுவிட்டு முழு நேர நடிப்பில் கவனம் செலுத்த துவங்கினார்.
இவர் இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் நடித்த 'இறைவி' திரைப்படம் எஸ்.ஜே.சூர்யாவை சிறந்த நடிகராக பார்க்க செய்தது. இதை தொடர்ந்து, ஸ்பைடர், மெர்சல், மாநாடு, துவங்கி... சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா XX படம் வரை இவரின் நடித்து வேறு ரகத்தில் இருந்தது.
ஒரு பக்கம் குணசித்ர வேடத்திலும், வில்லன் வேடத்திலும் எஸ்.ஜே.சூர்யா கலக்கி வந்தாலும்... மற்றொரு புறம் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். தற்போது ஒரு படத்திற்கு 3 முதல் 5 கோடி வரை சம்பளம் வாங்கும் எஸ்.ஜே.சூர்யாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஒரு வருடத்திற்கு 20 முதல் 25 கோடி வரை சம்பளமாக பெறுகிறார்.
சென்னையில் சொந்தமாக இவருக்கு 2 வீடுகள் மற்றும் பிற இடங்களிலும் சொத்துக்கள் வாங்கி வைத்துள்ளார். தன்னுடைய அக்கா செல்வி என்றால் இவருக்கு மிகவும் உயிர், எனவே அவருடைய பெயரிலும் சில சொத்துக்களை வாங்கி வைத்துள்ளார். BMW Z4 Roadster Melbourne Red சொகுசு கார், ஆடி, உள்ளிட்ட சொகுசு கார்களை வைத்துள்ளார். எனவே இவரின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 100 கோடி இருக்கும் என கூறப்படுகிறது .
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D