Rajinikanth: ஷிகர் தவனுடன் கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசித்த சூப்பர் ஸ்டார்! வைரலாகும் புகைப்படம்!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், பார்க்க நேற்றே சென்னையில் இருந்து மும்பை சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுடன், கிரிக்கெட் பார்த்து ரசித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் மாதம் கோலாகலமாக தொடங்கியது. இதில் லீக் போட்டியில், முதல் நான்கு இடங்களை பிடித்த இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட 4 நாடுகள் அரையிறுதி போட்டியில் நுழைந்தது.
இன்று நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீச்சை நடத்துகிறது. இந்த போட்டி தற்போது மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. \
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்தியா - நியூசிலாந்து, அணி இடையே நடக்கும் போட்டியில் இந்தியா தான் வெல்ல வேண்டும் என பல ரசிகர்கள் ஆர்ப்பரித்து வரும் நிலையில், அரையிறுதி போட்டியை காண ஏராளமான பிரபலங்களும் மும்பைக்கு படையெடுத்துள்ளனர். அந்த வகையில் தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த், தன்னுடைய மனைவி லதா ரஜினிகாந்த், மற்றும் அனிருத்தின் தந்தை ஆகியோர் நேற்று மும்பை கிளம்பி சென்ற நிலையில், இப்போட்டியை ரஜினிகாந்த் கண்டு ரசிக்கும் புகைப்படங்கள் சில வெளியாகி வைரலாகி வருகிறது.
ரஜினிகாந்த் தன்னுடைய மனைவி மற்றும் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுடன் பேசி கொண்டே கிரிக்கெட் போட்டியை பார்வையிடுகிறார். இதற்கு முன்பு ரஜினிகாந்த் கடைசியாக 2011-ம் ஆண்டு நடந்த இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை இறுதிபோட்டியை இதே வான்கடே மைதானத்தில் கண்டுகளித்தார். அதன்பின்னர் 12 ஆண்டுகளுக்கு பின்னர் அவர் நேரில் மீண்டும் இந்தியா - நியூசிலாந்து இடையே நடக்கும் 2023-ஆம் ஆண்டு உலக கோப்பை அரைஇறுதி போட்டியை பார்த்து ரசித்து வருவது குறிப்பிடத்தக்கது.