Keerthy Suresh vs Radhika Apte: ராதிகா ஆப்தேவை பழிவாங்க துடிக்கும் கீர்த்தி சுரேஷ்! கொடூரமான தொடர் 'அக்கா'!
கீர்த்தி சுரேஷ் vs ராதிகா ஆப்தே மோதும் YRF-ன் அதிகம் எதிர்பார்ப்பு ஏற்படுத்தி உள்ள கடுமையான பழிவாங்கும் தொடராக 'அக்கா'.
Keerthy Suresh
முன்னணி இந்திய தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் ஃபிலிம்ஸின் ஸ்ட்ரீமிங் தயாரிப்புப் பிரிவான YRF என்டர்டெயின்மென்ட், ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் விதத்தில், தென்னிந்திய அரசுகளால் அதிகம் கவனிக்கப்படும் இரண்டு கதாநாயகிகளை மையமாக வைத்து 'அக்கா' தொடரை உருமாக்கியுள்ளது.
keerthy suresh
இரண்டு எபின்கள் ஒருவரையொருவர் பழிவாங்க, கொடூரமாக மோதிக்கொள்ளும்... ஒரு பழிவாங்கும் படலமாகவே இந்த தொடர் உருவாகியுள்ளது.
அவளுக்கு அறிவே இல்ல.. பட்டா தான் புத்தி வரும்! அடிக்கடி ஜோவிகா மொக்கை வாங்கும் விஷயத்துக்கு சாபம் விட்ட வனிதா!
“இந்தத் தொடரை அறிமுக எழுத்தாளரும், இயக்குநருமான தர்மராஜ் ஷெட்டி இயக்கி உள்ளார், இவர் சமீபத்தில் ஆதித்யா சோப்ராவால் கண்டறியப்பட்ட படைப்பாளி ஆவார். 'அக்கா' தொடரை தொலைநோக்கு பார்வை பார்வையுடன் இயக்கி உள்ளார். இதுவே இந்த தொடரின் மிகப்பெரிய பிளசாக இருக்கும் என நம்பப்படுகிறது.
இதை தொடர்ந்து, YRF என்டர்டெயின்மென்ட்டின் இரண்டாவது தொடர் மண்டேலா மர்டர்ஸ் ஆகும், இது பல சீசன் தொடராகும், இது ஒரு மோசமான க்ரைம் த்ரில்லர். சண்டிகர் கரே ஆஷிகி திரைப்படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்ற வாணி கபூர், வைபவ் ராஜ் குப்தா உடன் இணைந்து ஸ்ட்ரீமிங் தளத்தில் தனது முதல் அறிமுக தொடரை வழிநடத்துகிறார். சுர்வீன் சாவ்லா மற்றும் ஜமீல் கான்ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தத் தொடர் தற்போது தயாரிப்பில் உள்ளது.
விரைவில் 'அக்கா' தொடர் வெளியாக உள்ள நிலையில், கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா ஆப்தே ஆகியோர் என்ன பிரச்சனைக்காக மோதி கொள்கிறார்கள். இவர்கள் இருவரும் அக்கா - தங்கையா என்கிற சந்தேகம் இந்த தொடரின் பெயரை பார்த்தாலே எழுகிறது.மேலும் கீர்த்திசுரேஷுடன் மோதும் ராதிகா ஆப்தே... கபாலி படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D