நயன்தாரா ட்ரெஸ்ஸிங் ஸ்டைலை அட்ட காப்பி அடித்த கீர்த்தி சுரேஷ்! மஞ்சள் சேலையில் மனம் மயக்கும் போட்டோஸ்!
கீர்த்தி சுரேஷ், நடிகை நயன்தாராவை ட்ரெஸ்ஸிங் ஸ்டைலை காப்பி அடித்தது போல் தற்போது மஞ்சள் நிற சேலையில் எடுத்து கொண்ட போட்டோஸ், வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தென்னிந்திய திரையுலகில் படு பிஸியான நடிகையாக மாறியுள்ள கீர்த்தி சுரேஷ், நயன்தாரை தொடர்ந்து 'தெறி' ஹிந்தி ரீமேக் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமாக உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஓரிரு வாரத்திற்கு முன்பு, பூஜையுடன் துவங்கிய நிலையில்... மும்பையில் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது.
தமிழில், அட்லீ இயக்குனராக அறிமுகமான இந்த படத்தை... ஹிந்தியில் இயக்குனர் காளீஸ்வரன் என்பவர் இயக்க உள்ளார். இந்த படத்தை அட்லீ தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க உள்ளார்.
விஜய் நடித்த கதாபாத்திரத்தில், வருண் தவான் நடிக்க, சமந்தா ஏற்று நடித்த வேடத்தில்... கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் எமி ஜாக்சன் ரோலில் வாமிகா கபி நடிக்கிறார். விரைவில் இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.
பாலிவுட் திரையுலகில் ஒரு பக்கம் கீர்த்தி பிசியாகி இருந்தாலும்... தமிழில் மட்டும் சுமார் 4 படங்கள் இவரின் கை வசம் உள்ளது. குறிப்பாக ஜெயம் ரவியுடன் நடித்துள்ள சைரன் திரைப்படம் பிப்ரவரி மாதம் வெளியாக உள்ளது.
இதை தவிர, ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா, கன்னி வெடி போன்ற படங்களிலும் நடித்து முடித்துள்ளார். பிரபல முன்னணி நடிகரின் தெலுங்கு படத்திலும் இவரை கமிட் செய்ய பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
சமூக வலைத்தளத்தில் விதவிதமான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள கீர்த்தி சுரேஷ், தற்போது நயன்தாரா சரீ ஸ்டைலை அட்ட காப்பி அடிப்பது போல் மஞ்சள் நிற சேலையில்... விதவிதமாக வெளியிட்டுள்ள போட்டோஸ் வைரலாகி வருகிறது.