கார்த்திக் சவால் விட்ட அதிர்ச்சியில் நெஞ்சு வலியால் துடித்த சிதம்பரம்- கார்த்திகை தீபம் சீரியலில் செம டுவிஸ்ட்
கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் தீபா தான் பல்லவி என்ற உண்மை கார்த்திக்கு தெரிய வந்த நிலையில் இன்று நடக்க போவதை பார்க்கலாம்.
Karthigai deepam serial
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம் தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபா தான் பல்லவி என்ற உண்மை கார்த்திக்கு தெரிய வந்ததை தொடர்ந்து இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது தீபா தான் பல்லவி என்பதை அறிந்த கார்த்தி கோபத்துடன் நேராக தீபா வீட்டிற்கு வந்து தர்மலிங்கத்திடம் இவ்வளவு நாளா தீபா பாடிட்டு இருந்த விஷயத்தை எதுக்கு என்கிட்ட இருந்து மறைச்சீங்க இது ரொம்ப பெரிய தப்பு என்று சொல்ல அவர் நீங்க கோபப்படுவதில் ஒரு நியாயம் இருக்கு ஆனா நடந்த விஷயங்களை முழுசா கேளுங்க என்று ராஜஸ்ரீ சத்தியம் வாங்கியது, தம்பிக்காக பாடுவது என அனைத்து விஷயங்களையும் சொல்கிறார்.
Zee Tamil Karthigai deepam serial
இனியனும் மாமா நீங்க அக்காவை தப்பா நினைக்காதீங்க உங்களுக்கு கோபம் இருந்தால் என்னை கூட அடிச்சுக்கோங்க என்று சொல்ல கார்த்திக் சமாதானமாகி அங்கிருந்து கிளம்பி வருகிறான். இளையராஜாவிடம் பல்லவியாக பாடிக் கொண்டிருப்பது என்னுடைய மனைவி தீபா தான் என்று சொல்ல அவனும் ஷாக் ஆகிறான்.
மேலும் கார்த்திக் இந்த விஷயத்தை வீட்டில் சொல்லப் போவதாக சொல்ல இதனால் தீபாவுக்கு பிரச்சனை வராதா என்று இளையராஜா கேட்க இல்ல தீபா எவ்வளவு நாளா சுமந்திருந்த சுமையை இறக்கி வைக்கட்டும் என கூறுகிறான். மறுபக்கம் மீண்டும் தீபாவை வழிமறிக்கும் சிதம்பரம் தனக்காக பாட கூப்பிட தீபா முடியாது என்று மறுக்க கார்த்தி இடம் பல்லவி நீ தான் என்ற உண்மையை சொல்லிவிடுவேன் என மிரட்ட போய் சொல்லுங்க என்று தீபா பதிலடி கொடுக்கிறாள்.
இதையும் படியுங்கள்... Karthigai Deepam: உச்ச கட்ட அதிர்ச்சியில் கார்த்திக்! பல்லவி யார் என்று தெரிய வந்த உண்மை! பரபரப்பான திருப்பம்!
Karthigai deepam serial Update
பிறகு மீனாட்சி அந்த ஆள் பொய் சொல்லிட போறாரு என்று சொல்ல பொய் சொல்லட்டும் அப்போதாவது அவருக்கு விஷயம் தெரியும் நானே அவரிடம் சொல்லலாம் என்று தான் இருக்கிறேன் என்று சொல்கிறாள். அதேபோல் சிதம்பரம் கார்த்தியை சந்தித்து பல்லவி தீபா தான் என்ற உண்மையை உடைக்க இது எனக்கே தெரியும் என்று கார்த்திக் அதிர்ச்சி கொடுக்கிறான். நீங்க என்னோட மியூசிக் கேரியரை கெடுக்க என்னென்னமோ பண்ணுங்க இனிமேல் உங்களோட கெரியரை நான் அழிக்கிறேன் என்று கார்த்திக் சவால் விட சிதம்பரம் அங்கிருந்து ஆவேசத்துடன் கிளம்பி வரும்போது வழியில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு கார் ஆக்சிடென்ட் ஆகிறது.
Karthigai deepam serial Today Episode
அதன் பிறகு அபிராமி கார்த்திகை ஜாதகத்தை கொண்டு பொய் ஜோசியர் ஒருவரிடம் ஜாதகம் கேட்க அவர் இப்போதைக்கு நேரம் சரியில்லை அவருடைய மனைவி தொடர்ந்து 52 நாட்கள் விளக்கு போட வேண்டும் தவறினால் பெரிய பிரச்சனையாகிவிடும் என்று சொல்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.
இதையும் படியுங்கள்... கனத்த இதயத்துடன் அன்பு மகளுக்கு பிரியா விடை கொடுத்த இளையராஜா - கலங்க வைக்கும் புகைப்படம்