MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • கமல்ஹாசனை மெர்சலாக்கிய மஞ்சுமெல் பாய்ஸ்... படக்குழுவை நேரில் சந்தித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த உலகநாயகன்

கமல்ஹாசனை மெர்சலாக்கிய மஞ்சுமெல் பாய்ஸ்... படக்குழுவை நேரில் சந்தித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த உலகநாயகன்

மலையாள திரையுலகின் லேட்டஸ்ட் சென்சேஷனான மஞ்சுமெல் பாய்ஸ் படக்குழுவினரை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 29 2024, 08:31 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
kamalhaasan Meet Manjummel Boys

kamalhaasan Meet Manjummel Boys

பிரேமம் படத்தை தொடர்ந்து தமிழ்நாட்டில் சக்கைப்போடு போட்டு வரும் மலையாளப் படம் தான் மஞ்சுமெல் பாய்ஸ். இப்படத்திற்கு தமிழ்நாட்டில் ஏகோபித்த வரவேற்பு கிடைப்பதற்கு காரணம் அதன் கதை பெரும்பாலும் கொடைக்கானலில் நடப்பது தான். கிட்டத்தட்ட தமிழ் படம் போலவே இதை தமிழ்நாட்டில் கொண்டாடத் தொடங்கிவிட்டனர். அதுமட்டுமின்றி இப்படம் கடந்த 2006-ம் ஆண்டு குணா குகையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு உள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
santana bharathi, kamal, chidambaram

santana bharathi, kamal, chidambaram

கொடைக்கானலில் உள்ள குணா குகை புகழ்பெற்ற டூரிஸ்ட் ஸ்பாட்டாக திகழ்ந்து வருகிறது. அந்த இடம் சுற்றுலாத் தளமானதற்கு காரணம் கமல்ஹாசனின் குணா திரைப்படம் தான். அப்படம் அங்கு படமாக்கப்பட்ட பின்னர் தான் அதற்கு குணா குகை என பெயர் வந்தது. குணா படம் ரிலீஸ் ஆகி 15 ஆண்டுகளுக்கு பின்னர் அங்கு நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை இயக்கி இருக்கிறார் சிதம்பரம்.

இதையும் படியுங்கள்... Kanguva Actors Salary: சூர்யா முதல்.. யோகி பாபு வரை.. 'கங்குவா' படத்தில் நடிக்க வாங்கிய சம்பளம்! முழு விவரம்!

35
kamalhaasan with Manjummel Boys Director

kamalhaasan with Manjummel Boys Director

கேரளாவின் மஞ்சுமெல் என்கிற பகுதியை சேர்ந்த நண்பர்கள் சிலர் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றபோது அதில் ஒருவர் மட்டும் குணா குகையில் சிக்கிக் கொள்கிறார். அவரை எப்படி மீட்டார்கள் என்பது தான் இப்படத்தின் கதை. இதை கதையாக கேட்பதற்கு சிம்பிளாக இருந்தாலும், அதை படமாக்கிய விதமும், திரைக்கதையும் தான் படத்தை இன்று கொண்டாட வைத்துள்ளது. இப்படம் ரிலீஸ் ஆன 7 நாட்களிலேயே ரூ.50 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து உள்ளது.

45
kamalhaasan greet Manjummel Boys Movie Team

kamalhaasan greet Manjummel Boys Movie Team

மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் கமல்ஹாசனின் குணா பட ரெபரன்ஸ் அதிக இடங்களில் பயன்படுத்தப்பட்டு உள்ள நிலையில், அப்படத்தை பார்த்த நடிகர் கமல்ஹாசன், படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டி உள்ளார். அப்போது குணா பட இயக்குனர் சந்தான பாரதியும் உடன் இருந்தார். 

55
udhayanidhi stalin meet manjummel boys

udhayanidhi stalin meet manjummel boys

அதேபோல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் மஞ்சுமெல் பாய்ஸ் படக்குழுவினரை தன்னுடைய அலுவலகத்துக்கு வரவழைத்து படக்குழுவினருக்கு பாராட்டுக்களை தெரிவித்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... 'கொட்டுக்காளி' படத்திற்கு சர்வதேச அரங்கில் குவிந்த பாராட்டு! மகிழ்ச்சியில் சிவகார்த்திகேயன் வெளியிட்ட வீடியோ!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கமல்ஹாசன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved