CBSE 10th RESULT: சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது..எந்த இணையதளத்தில் பார்க்கலாம் தெரியுமா?
இன்று காலை சிபிஎஸ்சி 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தற்போது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. தேர்வு எழுதிய 22 லட்சம் மாணவர்களில், 93.60 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு
மத்திய இடைநிலை கல்வி வாரியம் எனும் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் படித்த 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் 20ஆம் தேதிக்கு பிறகு வெளியாகும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் , இன்று காலை 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் திடீரென்று வெளியிடப்பட்டன.
12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் படி 16,21,224 மாணவ மாணவிகளில் 14,26,420 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது தேர்வு எழுதிய மாணவ மாணவிகளில் 87.98% பேர் தேர்ச்சி பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வு முடிவகள் வெளியாகி அடுத்த இரண்டு மணி நேரத்தில் 10ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளையும் சிபிஎஸ்இ வெளியிட்டது.
தமிழகத்தில் 90% மாணவர்கள் தேர்ச்சி
25 ஆயிரத்து 725 பள்ளிகளைச் சேர்ந்த 22 லட்சத்து 38 ஆயிரத்து 827 மாணவர்கள் தேர்வை எழுதிய நிலையில் , 20 லட்சத்து 95 ஆயிரத்து 467 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். ஒட்டுமொத்தமாக 93.60 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். முந்தைய ஆண்டை விட 0.48 விழுக்காடு தேர்ச்சி சதவிகிதம் அதிகரித்திருப்பதாக சிபிஎஸ்இ தெரிவித்திருக்கிறது.
நாடு தழுவிய அளவில் திருவனந்தபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 99.75 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாடு,ஆந்திரா கேரளா,கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் அடங்கிய சென்னை மண்டலத்தில் தேர்ச்சி விழுக்காடு 99.30 ஆக இருக்கிறது. தமிழகத்தில் 75 ஆயிரம் மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய நிலையில், 90% அதிகமான மாணவர்கள் தமிழகத்தில் மட்டும் தேர்ச்சி அடைந்திருப்பதாக சிபிஎஸ்இ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
CBSE 12TH RESULT : சிபிஎஸ்சி 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது.! 3வது இடம் பிடித்த சென்னை