CBSE 12TH RESULT : சிபிஎஸ்சி 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது.! 3வது இடம் பிடித்த சென்னை

CBSE 12ம் வகுப்பு தேர்வு எழுதியவர்களில் மாணவிகள் 91.52% தேர்ச்சியும், மாணவர்கள் 85.12% தேர்ச்சியும் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 50% தேர்ச்சி பெற்றுள்ளனர்.  அகில இந்திய அளவில் சென்னை 3வது இடம் பிடித்துள்ளது. 
 

CBSE Class 12th Exam Results Declared KAK

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்

மத்திய இடைநிலை கல்வி வாரியம் எனும் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் படித்த 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் 38 லட்சம் பேர் சிபிஎஸ்சி 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வை எழுதினர். இதில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை சிபிஎஸ்சி நிர்வாகம் இன்று அதிகாரப்பூர்வ இணையத்தில் வெளியிட்டுள்ளது. சிபிஎஸ்சி வெளியிட்டுள்ள 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் படி 16,21,224 மாணவ மாணவிகளில் 14,26,420 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Savukku: கோவை சிறையில் கொல்லப்படுவேன்... என் கையை உடைத்தது இவர் தான்- நீதிமன்ற வளாகத்தில் கதறிய சவுக்கு சங்கர்

3ஆம் இடம் பிடித்த சென்னை

அதாவது தேர்வு எழுதிய மாணவ மாணவிகளில் 87.98% பேர் தேர்ச்சி பெற்றிருப்பதாகவும், இது கடந்த 2023 கல்வி ஆண்டு (87.33%) முடிவுகளுடன் ஒப்பிடும் போது 0.65% அதிகரித்துள்ளதாக சிபிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் படி, அகில இந்திய அளவில் திருவனந்தபுரம் 99.91% தேர்ச்சி விகிதத்தை பெற்று முதலிடத்தையும் , 99.04% பெற்று விஜயவாடா இரண்டாவது இடத்தையும் மற்றும் 98.47% தேர்ச்சியை பெற்று சென்னை மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.   சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள்  www.cbse.gov.in மற்றும் www.cbseresults.nic.in என்ற இணையத்தில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்து வருகின்றனர்.

மாணவர்களை விட மாணவிகள் தேர்ச்சி அதிகம்

CBSE 12ம் வகுப்பு தேர்வு எழுதியவர்களில் மாணவிகள் 91.52% தேர்ச்சியும், மாணவர்கள் 85.12% தேர்ச்சியும் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 50% தேர்ச்சி பெற்றுள்ளனர். 2023ம் கல்வி ஆண்டை போல 2024ம் ஆண்டு தேர்வு முடிவுகளில் மாணவர்களை விட மாணவிகள் 6.40% பேர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  CBSE 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளின் படி, சிபிஎஸ்சி அரசு பள்ளிகளின் தேர்ச்சி 88.23% மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தேர்ச்சி 91.24% ஆகவும் உள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios