MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • பிக்பாஸ் வீட்ல அவ தம் அடிச்சா உனக்கென்ன? விசித்ராவை வெளுத்துவாங்கிய வனிதா விஜயகுமார்

பிக்பாஸ் வீட்ல அவ தம் அடிச்சா உனக்கென்ன? விசித்ராவை வெளுத்துவாங்கிய வனிதா விஜயகுமார்

பிக்பாஸ் வீட்டில் பெண் போட்டியாளர் ஒருவர் சிகரெட் பிடித்ததை விமர்சித்து பேசிய விசித்ராவை நடிகை வனிதா விஜயகுமார் கடுமையாக சாடி உள்ளார்.

2 Min read
Author : Ganesh A
| Updated : Oct 09 2023, 02:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
jovika, vichithra, Vanitha

jovika, vichithra, Vanitha

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் முதல் வாரமே சண்டைகள் நிறைந்து காணப்பட்டது. கடந்த வாரம் அதிகம் சலசலப்பை ஏற்படுத்தியது ஜோவிகா - விசித்ரா இடையேயான மோதல் தான். ஜோவிகா தான் 8-ம் வகுப்பு வரை தான் படித்துள்ளதாகவும், அதன்பின்னர் படிப்பு வராததால் பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு பின்னர் நடிப்பு பயிற்சி எடுத்து அதில் டிப்ளமோ முடித்ததாக கூறி இருந்தார். விசித்ரா பள்ளிப்படிப்பை முடிக்காததை விசித்ரா விமர்சித்து இருந்தார்.

24
Jovika

Jovika

கண்டிப்பாக உனக்கு அடிப்படை கல்வி தெரிந்திருக்க வேண்டும். அதனால் நீ 10 அல்லது 12 வகுப்பு வரையாவது படிக்க வேண்டும் என அட்வைஸ் பண்ணினார். விசித்ரா தன்னுடைய படிப்பை பற்றி பேசியதால் கடுப்பான ஜோவிகா, தனக்கு வரவில்லை என்பதால் தான் அதை விட்டு விலகினேன். பின்னர் ஏன் அதைப்பற்றி மீண்டும் மீண்டும் பேசுகிறீர்கள் என கத்தி சண்டைபோட்டார். இந்த சண்டைக்கு கமல்ஹாசன் முடிவுகட்டினார். படிப்பு முக்கியம் தான் என்பதை வலியுறுத்தி பேசிய கமல், ஜோவிகாவின் பேச்சிலும் நியாயம் இருப்பதை சுட்டிக்காட்டினார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

34
jovika, vichithra

jovika, vichithra

மகளின் பேச்சைப் பலரும் பாராட்டி வருவதால் உற்சாகத்தில் திளைத்துப் போன நடிகை வனிதா விஜயகுமார். யூடியூப்பில் பல்வேறு பேட்டிகளை கொடுத்து வருவதோடு, சமூக வலைதளங்களிலும் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். அதுமட்டுமின்றி பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பெண்களிடம் டாட்டூ வெளியே தெரியும்படி குத்தக்கூடாது என விசித்ரா பேசியதையும் சுட்டிக்காட்டி அவரை வெளுத்து வாங்கி உள்ளார் வனிதா.

44
vanitha vijayakumar

vanitha vijayakumar

இதுபற்றி அவர் பேசியுள்ளதாவது : “பிக்பாஸ் வீட்ல இருக்குற பிள்ளைங்க எல்லாம் நீங்க பெத்த பிள்ளைங்க மாதிரி ஓவரா அக்கறை காட்டக்கூடாது. அவங்க டாட்டூ போடுறதையும், தம் அடிக்குறதையும் அவங்க பெற்றோர் பார்த்துப்பாங்க. உங்களுக்கென்ன. அந்த பிள்ளைங்களை எல்லாம் உங்களுக்கு நேந்து விட்டுருக்காங்களா? நீங்க 3 பசங்களுக்கு அம்மாவா இருக்கலாம். அதுக்காக மத்த பிள்ளைங்கள ஓவரா கரெக்‌ஷன் பண்ண வேணாம். நீங்க எதுக்காக பிக்பாஸ் வீட்டுக்கு வந்தீங்களோ அந்த வேலையை மட்டும் பாருங்க. மத்த விஷயத்துல மூக்கை நுழைக்காதீங்க” என காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார் வனிதா.

இதையும் படியுங்கள்... Bigg Boss 7 Tamil: இரண்டாவது வார நாமினேஷனில் டார்கெட் செய்யப்படும் மூன்று போட்டியாளர்கள்! யார் யார் தெரியுமா?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிக் பாஸ் (தமிழ்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved