Asianet News TamilAsianet News Tamil

Bigg Boss 7 Tamil: இரண்டாவது வார நாமினேஷனில் டார்கெட் செய்யப்படும் மூன்று போட்டியாளர்கள்! யார் யார் தெரியுமா?

இன்றைய தினம் முதல் புரோமோவிலேயே பிக்பாஸ் போட்டியாளர்கள் முட்டி மோதிக்கொண்ட நிலையில், தற்போது இரண்டாவது ப்ரோமோவில், இரண்டாவது வாரத்தின் நாமினேஷன் படலம் நடைபெறுவதை பார்க்கமுடிகிறது.
 

Bigg boss Season 7 second week nomination details mma
Author
First Published Oct 9, 2023, 1:07 PM IST | Last Updated Oct 9, 2023, 1:07 PM IST

'பிக் பாஸ் சீசன் 7' நிகழ்ச்சி கடந்த வாரம் துவங்கிய நிலையில், தற்போது வெற்றிகரமாக இரண்டாவது வாரத்தை எட்டி உள்ளது. யாருமே எதிர்பாராத விதமாக முதல் வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து இளம் போட்டியாளரான, அனன்யா ராவ்... மக்களின் ஓட்டுகள் அடிப்படையில் ஏவிக்ட் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து இன்றைய தினம், பிக் பாஸ் வீட்டின் இரண்டாவது நாமினேஷன் படலம் நடந்துள்ளது. இது குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ள நிலையில், மூன்று போட்டியாளர்களை டார்கெட் செய்து சிலர் நாமினேட் செய்வதை பார்க்க முடிகிறது.

 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

மேலும் இன்றைய முதல் ப்ரோமோவில், விஷ்ணு மற்ற போட்டியாளர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது, திடீர் என டெங்ஷனாகி "இந்த வார கேப்டனான விக்ரமை பார்த்து, நீங்கள் கேப்டனா அல்லது பிக் பாஸ் வீட்டில் உள்ள 11 பேர் கேப்டனா என கேள்வி எழுப்புகிறார். பின்னர் இது குறித்து பிரதீப் மற்றும் விஷ்ணுவுக்கு இடையே சிறு வாக்குவாதம் நடந்து முடிந்தது.

Bigg Boss Arav: இரண்டாவது குழந்தைக்கு தந்தையான பிக்பாஸ் ஆரவ்!! குவியும் ரசிகர்கள் வாழ்த்து!!

இதைத்தொடர்ந்து பிக் பாஸ் நாமினேஷன் நடைபெறுகிறது. பலர் விஷ்ணுவுக்கு எதிராக அவருடைய பெயரை நாமினேட் செய்கின்றனர். இவரைத் தொடர்ந்து, இரண்டாவதாக மாயாவுக்கு எதிராக பலர் நாமினேட் செய்வதையும் பார்க்க முடிகிறது. அதேபோல் அனன்யா எந்த ஒரு விஷயத்திலும் மிகவும் ஈடுபாடு இல்லாமல் பிக்னிக் வந்தது போல் இருக்கிறார் என கூறி அவருடைய பெயரையும் சில நாமினேட் செய்கின்றனர். எனவே இந்த வாரம் விஷ்ணு, மாயா, அனன்யா, ஆகிய மூவரின் பெயர் அதிகப்படியாக நாமினேஷன் பட்டியலில் அடிபடுகிறது. இவர்களை தொடர்ந்து யார் யார் பெயர் இந்த லிஸ்டில் சிக்கும் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios