Bigg Boss Arav: இரண்டாவது குழந்தைக்கு தந்தையான பிக்பாஸ் ஆரவ்!! குவியும் ரசிகர்கள் வாழ்த்து!!
பிக்பாஸ் பிரபலமும், டைட்டில் வின்னருமான ஆரவ் தனக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ள தகவலை புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இவருக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Biggboss Contestant Arav
தொழிலதிபரும், மாடலுமான ஆரவ் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு, டைட்டிலை தட்டிச் சென்றார். அதே நேரம் சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத போட்டியாளர் என்ற பெயரையும் எடுத்தார். குறிப்பாக ஓவியா - ஆரவ் இடையே உருவான காதல் காரணமாக, ஓவியா நீச்சல் தொட்டிக்குள் குதித்து தற்கொலை வரை முயன்றது பரபரப்பின் உச்சம்.
Oviya - Arav Love
அதேபோல், ஓவியாவுக்கு கொடுத்த முத்தத்திற்கு மருத்துவ முத்தம் என பெயர் வைத்தது, தற்போது வரை பிக்பாஸ் ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு சம்பவமாக உள்ளது. ஓவியா தான் இந்த சீசனில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் மருத்துவ சிகிச்சைக்காக வெளியேறியதால்... ரசிகர்களின் ஆத்தாவோடு ஆரவ் டைட்டில் பட்டத்தை கைப்பற்றினார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Arav Marriage
இதைத்தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு, தன்னுடைய நீண்ட நாள் காதலியும், நடிகையுமான ராஹேன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஏற்கனவே கடந்த 2021 ஆம் ஆண்டு அழகிய ஆண் குழந்தை பிறந்த நிலையில், தற்போது இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்த தகவலை புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளார்.
blessed Second Baby:
இது குறித்து அவர் போட்டுள்ள பதிவில், "எங்கள் விலைமதிப்பில்லா குட்டி இளவரசியை உலகிற்கு அறிமுகப்படுத்தும் போது, எங்கள் இதயங்கள் மகிழ்ச்சியால் வெடிக்கின்றன. அவள் ஏற்கனவே எங்கள் வாழ்க்கையை சிரிப்பு மற்றும் முடிவற்ற அரவணைப்புகளால் நிரப்பியுள்ளதால் எங்கள் குடும்பம் முழுமை அடைந்ததாக உணர்கிறோம். மேலும் எண்களின் ஒவ்வொரு தருணத்தையும் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறோம். எங்களுடைய பெண் குழந்தையுடன் இந்த அழகான பயணத்தை துவங்கியுள்ளோம். உங்கள் அன்பு மற்றும் ஆசீர்வாதங்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
Bigg Boss Breaking : திடீரென பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் பவா செல்லதுரை... காரணம் என்ன?