ஜப்பான் முதல் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் வரை... தீபாவளிக்கு பட்டாசாய் ரிலீஸ் ஆக உள்ள தமிழ் படங்களின் லிஸ்ட் இதோ
தீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் 12-ந் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அதையொட்டி ரிலீஸ் ஆக உள்ள தமிழ் படங்களை பற்றி பார்க்கலாம்.
Diwali release movies
தீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் 12-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது பட்டாசு மற்றும் புதுப் படங்கள். ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு எக்கச்சக்கமான புதுப்படங்கள் வெளியாகும், குறிப்பாக முன்னணி நடிகர்களின் படங்கள் இந்த நாளில் வெளியாவதுண்டு. அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு விஜய், அஜித், ரஜினி, கமல் போன்ற டாப் ஹீரோக்களின் படங்கள் திரைக்கு வராவிட்டாலும், அதற்கு இணையாக மூன்று தரமான நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. அதைப்பற்றி பார்க்கலாம்.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் ஜிகர்தண்டா. இப்படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்கிற பெயரில் எடுத்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ். இதில் ராகவா லாரன்ஸும், எஸ்.ஜே.சூர்யாவும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற நவம்பர் 10-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ஜப்பான்
கார்த்தி நடித்துள்ள ஜப்பான் திரைப்படமும் இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தை ராஜு முருகன் இயக்கி உள்ளார். இதில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடித்துள்ளார். நகைக்கடை கொள்ளைகளை அரங்கேற்றிய திருவாரூர் முருகனின் வாழ்க்கையை மையமாக வைத்து தான் இப்படம் எடுக்கப்பட்டு உள்ளது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். வருகிற நவம்பர் 10-ந் தேதி ஜப்பான் திரைக்கு வர உள்ளது. இது நடிகர் கார்த்தியின் 25-வது படமாகும்.
ரெய்டு
தீபாவளி ரேஸில் லேட்டஸ்ட் ஆக இணைந்த திரைப்படம் தான் ரெய்டு. கார்த்தி என்பவர் இயக்கியுள்ள இப்படத்திற்கு கொம்பன், விருமன் படங்களின் இயக்குனர் முத்தையா தான் வசனம் எழுதி இருக்கிறார். இப்படத்தில் விக்ரம் பிரபு நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்துள்ள இப்படம் நவம்பர் 10-ந் தேதி திரைகாண உள்ளது. இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்து உள்ளார். இப்படத்தை கனிஷ்க் மற்றும் ஜி மணிகண்டன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... லியோவுக்கு முன் Fake ஆன பிளாஷ்பேக்குடன் வெளிவந்த தமிழ் படங்கள் இத்தனை இருக்கா..! லிஸ்ட் இதோ