லியோவுக்கு முன் Fake ஆன பிளாஷ்பேக்குடன் வெளிவந்த தமிழ் படங்கள் இத்தனை இருக்கா..! லிஸ்ட் இதோ
லியோ படம் ரிலீஸாகி வெற்றிநடைபோட்டு வரும் நிலையில், அப்படத்தில் வரும் பிளாஷ்பேக் காட்சிகள் Fake ஆனது என லோகேஷ் கூறிய நிலையில், இதற்கு முன் அதுமாதிரி வந்த படங்கள் பற்றி பார்க்கலாம்.
லியோ
மாஸ்டர் வெற்றிக்கு பின்னர் நடிகர் விஜய்யும், லோகேஷ் கனகராஜும் இரண்டாவது முறையாக இணைந்து பணியாற்றிய திரைப்படம் லியோ. இப்படம் கடந்த அக்டோபர் 19-ந் தேதி திரைக்கு வந்து சக்கைப்போடு போட்டு வருகிறது. லியோ படத்தின் இரண்டாம் பாதியில் மன்சூர் அலிகான் சொல்லும் லியோ தாஸின் பிளாஷ்பேக் கதை உண்மையில்லை என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேட்டிகளில் கூறி வருவது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. பொய்யான கதையை சொல்லி எல்லாரையும் ஏமாற்றிவிட்டீர்களா என ஒருபுறம் அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பினாலும், மறுபுறம் இந்த டுவிஸ்ட் யாரும் எதிர்பார்க்காத ஒன்றாக இருப்பதாகவும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில், இதுபோன்று Fake ஆன பிளாஷ்பேக் உடன் வெளிவந்த தமிழ் படங்கள் பற்றி பார்க்கலாம்.
பீட்சா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை ருசித்த படம் பீட்சா. இப்படம் மூலம் தான் கார்த்திக் சுப்புராஜ் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்திலும் Fake ஆன பிளாஷ்பேக் கதையை சொல்லி தான் விஜய் சேதுபதி வைரத்தை திருடி இருப்பார். படத்தின் வெற்றிக்கும் அந்த Fake பிளாஷ்பேக் முக்கிய பங்காற்றியது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
மன்மதன்
நடிகர் சிம்புவின் கெரியரில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது மன்மதன். 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்த இப்படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இப்படத்தை சிம்புவே இயக்கியும் இருந்தார். இப்படத்திலும் Fake பிளாஷ்பேக்கை அழகாக கையாண்டு அதில் வெற்றியும் கண்டிருந்தனர்.
விருமாண்டி
கமல்ஹாசன் இயக்கத்தில் வெளிவந்த மாஸ்டர் பீஸ் படங்களில் விருமாண்டியும் ஒன்று. அப்படத்தில் அப்படியே மதுரைக்காரனாகவே வாழ்ந்திருப்பார் கமல்ஹாசன். காலம் கடந்து கொண்டாடப்படும் இப்படத்திலும் பசுபதி சொல்லும் பிளாஷ்பேக் காட்சிகள் Fake ஆனது தான். அதையும் சூப்பராக காட்சிப்படுத்தி இருந்தார் கமல்ஹாசன்.
வாலி
நடிகர் அஜித்தின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் வாலி. இப்படத்தின் மூலம் தான் எஸ்.ஜே.சூர்யா இயக்குனராக அறிமுகமானார். இப்படத்தில் நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இதிலும் அஜித் சொல்லும் லவ் டிராக் Fake ஆனது தான். இப்படி கோலிவுட்டில் ஏற்கனவே நிறைய Fake பிளாஷ்பேக் படங்கள் வந்துள்ளன. அதில் லியோ புதிதாக இணைந்துள்ளது.
இதையும் படியுங்கள்... லியோ படத்தில் ரசிகர்கள் கவனிக்க தவறிய டுவிஸ்டுகள் இத்தனை இருக்கா... Decode பண்ணிய லோகேஷ் கனகராஜ்