லியோ படத்தில் ரசிகர்கள் கவனிக்க தவறிய டுவிஸ்டுகள் இத்தனை இருக்கா... Decode பண்ணிய லோகேஷ் கனகராஜ்
லியோ பட ரிலீஸுக்கு பின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அளித்துள்ள பேட்டியில், அப்படத்தில் கவனிக்கப்படாத டுவிஸ்ட் பற்றி பேசி இருக்கிறார்.
LEO decoding
நடிகர் விஜய்யின் 67-வது படமான லியோ கடந்த அக்டோபர் 19-ந் தேதி திரைக்கு வந்தது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். இதில் விஜய்யுடன் திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மேத்யூ தாமஸ், ஜார்ஜ் மரியான், அனுராக் கஷ்யப், மிஷ்கின், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலி கான், கவுதம் மேனன், பிரியா ஆனந்த் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படம் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வரும் நிலையில், அப்படத்தில் தான் வைத்த சின்ன சின்ன டுவிஸ்ட்டுகள் குறித்து லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் கூறி உள்ளார்.
ஹைனா
லியோ படத்தில் ஹைனாவும் ஒரு முக்கிய பங்காற்றி இருக்கும். அதன் ஹைனா காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் இருப்பதாக பலரும் பாராட்டி இருந்தனர். அப்படத்தில் நடிகர் விஜய் ஒரு ஹைனாவை தத்தெடுத்து வளர்த்து வருவார். அதற்கு பெயர் வைக்கும் போது விஜய்யின் மகள் எலிசா என பெயர் வைக்க சொல்வார். அதேபோல் அவரது மகன் கோஸ்ட் எனக் கூறுவார். ஆனால் விஜய் அதற்கு சுப்ரமணி என பெயர் வைப்பார். அந்த பெயர் மூன்றாம் பிறை படத்தில் இருந்து எடுத்த ரெபரன்ஸ் என லோகேஷ் கூறினார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
பார்த்திபன்
நடிகர் விஜய்யின் பார்த்திபன் கேரக்டர் லியோவாக மாறும் காட்சி படத்தின் முதல் பாதியிலேயே பல இடங்களில் வரும். குறிப்பாக அவர் ஆக்ரோஷமாக எதிரிகளை துவம்சம் செய்யும்போது அவர் லியோவாக மாறி இருப்பார். அந்த சீன்களில் எல்லாம் பின்னணியில் இருந்து அவரை பார்த்திபன் என அழைத்தாலும் அவர் திரும்பவே மாட்டார். அதுமாதிரி படத்தில் இரண்டு, மூன்று இடங்களில் வைத்திருந்தும் அதை யாரும் நோட் பண்ணவில்லை என லோகி கூறி உள்ளார்.
மாயா
லியோ படத்தில் பிக்பாஸ் மாயா ஒரு சீனில் மட்டும் நடித்திருப்பார். அவர் விஜய்யின் காஃபி ஷாப்பிற்கு வந்து காஃபி குடித்துவிட்டு Pleasure is Mine என எழுதிவிட்டு செல்வார். அவரை ஒரு ஏஜண்டாக தான் படத்தில் பயன்படுத்தி இருக்கிறாராம் லோகேஷ். விக்ரம் படத்தில் விபச்சாரியாக இருந்த அவரை கமல் தன்னுடைய படையில் சேர்த்துக்கொண்டதாகவும், அவர் விஜய்யை கண்காணிக்கவே அங்கு வந்ததாகவும், லோகேஷ் கூறி உள்ளார்.
லியோவுக்கும் அமருக்கும் உள்ள சம்பந்தம்
லியோ படத்தில் நடிகர் விஜய் அனாதை ஆசிரமத்தில் இருந்து வந்ததாக கூறி இருப்பார். அதேபோல் விக்ரமிலும் அமர் கதாபாத்திரத்தில் நடித்த பகத் பாசிலும் அனாதை ஆசிரமத்தில் இருந்து வளர்ந்ததாக தன்னை அறிமுகப்படுத்தி இருப்பார். அதனால் அவர்கள் இருவருக்குமே தொடர்பு இருக்கிறது என லோகேஷ் கூறி இருக்கிறார். இது யாருமே எதிர்பார்க்காத ஒரு டுவிஸ்ட் ஆகவே பார்க்கப்படுகிறது.
மன்சூர் அலிகான்
மன்சூர் அலிகான் சொன்ன கதை தான் படத்தின் இரண்டாம் பாதியை நகர்த்தி செல்லும். இந்த நிலையில், அவர் சொன்ன கதை உண்மையில்லை என்பதையும் லோகேஷ் தெளிவுபடுத்தி உள்ளார். அவர் கவுதம் மேனனிடம் கதை சொல்ல தொடங்கும்போது அது தன்னுடைய கண்ணோட்டத்தில் சொல்லும் கதை, அது பொய்யா கூட இருக்கலாம் என சொல்லி தான் தொடங்குவாராம், அந்த காட்சி எடிட் செய்யப்பட்டுவிட்டதாக லோகேஷ் கூறினார்.
இதையும் படியுங்கள்... "என்னை செதுக்கிய திரையுலக சிற்பிகள்".. ஜப்பான் டிரைலர் வெளியீட்டு விழா - நெகிழ்ச்சியோடு நன்றி சொன்ன கார்த்தி!