MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • புர்ஜ் கலிஃபாவில் சொந்த அபார்ட்மெண்ட்... கோடிகளில் புரளும் மோகன்லால் இத்தனை கோடி சொத்துக்களுக்கு அதிபதியா?

புர்ஜ் கலிஃபாவில் சொந்த அபார்ட்மெண்ட்... கோடிகளில் புரளும் மோகன்லால் இத்தனை கோடி சொத்துக்களுக்கு அதிபதியா?

மலையாள திரையுலகின் சூப்பர்ஸ்டாராக வலம் வரும் மோகன்லால் இன்று தனது 64-வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு குறித்து பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : May 21 2024, 10:51 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Mohanlal

Mohanlal

கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள எலந்தூர் கிராமத்தில் கடந்த1960ம் ஆண்டு மே 21-ந் தேதி பிறந்தவர் மோகன்லால். திருவனந்தபுரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் படித்த இவர், கல்லூரி படிப்பை மகாத்மா காந்தி கல்லூரியில் படித்து முடித்தார். இதையடுத்து கடந்த 1978-ம் ஆண்டு சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் மோகன்லால். இவர் நடித்த முதல் படம் தீரனோட்டம். இப்படத்தில் ஹீரோவாக நடித்ததோடு மட்டுமின்றி தன் நண்பர்களுடன் சேர்ந்து தயாரித்தும் இருந்தார் மோகன்லால்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
malayalam Actor Mohanlal

malayalam Actor Mohanlal

தீரனோட்டம் படத்தில் மனநலம் குன்றிய இளைஞர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மோகன்லால். அப்போது சென்சார் பிரச்சனையில் சிக்கிய இப்படம் 25 ஆண்டுகளுக்கு பின்னர் தான் ரிலீஸ் ஆனது. அதனால் மோகன்லாலின் முதல் படமாக மஞ்சில் விரிஞ்சா அமைந்தது. இப்படம் 1980-ம் ஆண்டு திரைக்கு வந்தது. இதையடுத்து சினிமாவில் பிசியாக நடிக்க தொடங்கிய மோகன்லால் மூன்றே ஆண்டுகளில் 25 படங்களில் நடித்து முடித்தார். அதில் பெரும்பாலான படங்களில் வில்லனாக நடித்திருந்தார்.

36
Mohanlal Birthday

Mohanlal Birthday

சசிகுமார் இயக்கத்தில் இவர் நடித்த இவிடே துடங்குன்னு என்கிற திரைப்படம் தான் மோகன்லாலுக்கு ஹீரோ அந்தஸ்தை கொடுத்தது. அதையடுத்து பிரியதர்ஷன் இயக்கத்தில் அவர் நடித்த பூச்சக்கோரு மூக்குதின் என்கிற திரைப்படம் மோகன்லால் என்கிற நடிகரின் வெர்சடைல் ஆக்டிங்கை வெளிக்கொண்டு வந்தது. இதையடுத்து கடந்த 44 ஆண்டுகளாக மோகன்லால் - பிரியதர்ஷன் கூட்டணி வெற்றிநடை போட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்... Baakiyalakshmi : போதும்டா சாமி ஆள விடுங்க... பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து திடீரென விலகிய முக்கிய பிரபலம்

46
Mohanlal salary

Mohanlal salary

இவர் மலையாளம் மட்டுமின்றி தமிழில் இருவர், சிறைச்சாலை, காப்பான், ஜில்லா, ஜெயிலர் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அதேபோல் தெலுங்கு, இந்தி படங்களிலும் இவர் நடித்துள்ளார். நடிகர் மோகன்லாலின் திரையுலக பயணத்தில் திரிஷ்யம் படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. ஜீத்து ஜோசப் இயக்கிய இப்படம் இதுவரை இரண்டு பாகங்கள் வெளிவந்துள்ளன. அந்த இரண்டு பாகங்களுமே பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின. அதுமட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், கொரியா தொடங்கி ஹாலிவுட் வரை ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

56
Mohanlal Net Worth

Mohanlal Net Worth

தற்போது 64 வயதிலும் மலையாள திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் மோகன்லால் ஒரு படத்துக்கு ரூ.17 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். கேரளாவின் பணக்கார நடிகராக இருக்கும் இவர் இன்று தனது 64-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகர் மோகன்லால் ரூ.376 கோடி சொத்துக்களுக்கு அதிபதியாக உள்ளாராம்.

66
Mohanlal Car Collection

Mohanlal Car Collection

இவரிடம் ஏராளமான சொகுசு கார்களும் உள்ளன. அதன்படி ரூ.5 கோடி மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி, 90 லட்சம் மதிப்பிலான டொயோடா வேல்பையர், 1.36 கோடி மதிப்புள்ள டொயோட்டா லேண்ட் குரூசர், ரூ.4 கோடி மதிப்பிலான லம்போகினி உருஸ் உள்பட எக்கச்சக்கமான சொகுசு கார்கள் உள்ளன. இதுதவிர உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவின் 29-வது மாடியில் ஒரு அப்பார்ட்மெண்டையும் வாங்கி இருக்கிறாராம் மோகன்லால். 

இதையும் படியுங்கள்...  அன்று திருமணமான நடிகருடன் காதல்.. இன்று இரட்டை குழந்தைகளுக்கு அம்மா - யார் இந்த நடிகை தெரிகிறதா?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மோகன்லால்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved