டேட்டிங் & ரிலேஷன்ஷிபில் இருக்கும் இளம் பெணகள் - தெரிஞ்சுக்க வேண்டியது என்ன?
Young Women : ஒரு ரிலேஷன்ஷிப் அல்லது டேட்டிங் செய்துகொண்டிருக்கும் இளம் பெண்கள் நிச்சயம் தெரிந்துகொள்ளவேண்டிய 4 விஷயங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
பொருளாதார ரீதியாக சுதந்திரம்
ஒரு பெண் தனக்குப்பிடித்த ஆணுடன் டேட்டிங் செய்து வந்தாலும், அந்த நேரத்திலும் அப்பெண் பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருக்க வேண்டும் ஒன்று கூறுகிறது ஒரு ஆய்வின் முடிவு. வெளியிடங்களுக்கு டேட்டிங் செல்லும் போது, எப்போதும் மறக்காமல் பணத்தை பெணகள் கொண்டு செல்ல வேண்டும். இது இளம் பெண்களுக்கு தங்கள் நிலைமையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க, அவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. வேறொரு நபரின் செலவில் நாம் இந்த டேட்டிங் சென்றோம் என்ற சிறு கூச்சம் கூட அவர்களுக்கு எழாது.
இதை மட்டும் ஃபாலோ பண்ணா போதும்.. உங்களையும் துணையையும் யாராலயும் பிரிக்கவே முடியாது..
மரியாதையற்ற நடத்தையைக் கையாளுதல்
டேட்டிங் செல்லும்போதோ, அல்லது ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருக்கும்போது பெண்கள் நிச்சயம் கடைபிடிக்க வேண்டிய ஒன்று தான் சுயமரியாதை. எந்த நேரத்திலும் தங்கள் துணை தங்களை மரியாதையற்ற நிலையில் நடத்துவதை அவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடாது. மனித படைப்பின் மாண்பாக இருக்கும் பெண்கள், தங்களை ஒருபோதும் தரம் தாழ்த்திக்கொள்ளக்கூடாது.
உடல்ரீதியாக துன்புறுத்துதல்
டேட்டிங் அல்லது ரிலேஷன்ஷிப்பில் இருக்கும்போது மட்டுமல்ல, ஒரு பெண் தனது வாழ்க்கையில் எந்த ஒரு சூழ்நிலையிலும் சகித்துக்கொள்ளக்கூடாத ஒன்று என்றால், அது உடல்ரீதியான துன்புறுத்துதல் தான். நம்மை காதலிக்கிறார் அல்லது நம்மோடு ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார் என்பதற்காக அவர் நம் மேல் அதிகாரத்தை செலுத்த பெண்கள் அனுமதிக்க கூடாது.
பொருளாதார ரீதியான பொறுப்புகளை பகிர்தல்
ஆண், பெண் என்ற பாகுபாடுகள் பறந்து பல காலம் ஆகிவிட்ட நிலையில், டேட்டிங் அல்லது ரிலேஷன்ஷிப்பில் உள்ள பெண்கள், தங்கள் துணையோடு பொருளாதார ரீதியான பொறுப்புகளை 50/50 என்ற விகிதத்தில் பகிர்ந்துகொள்ளவேண்டும். அது அவர்களின் உறவை வலுப்படுத்த பெரிய அளவில் உதவும்.