- Home
- Gallery
- Baakiyalakshmi : போதும்டா சாமி ஆள விடுங்க... பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து திடீரென விலகிய முக்கிய பிரபலம்
Baakiyalakshmi : போதும்டா சாமி ஆள விடுங்க... பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து திடீரென விலகிய முக்கிய பிரபலம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியலான பாக்கியலட்சுமி தொடரில் இருந்து முக்கிய பிரபலம் ஒருவர் விலகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

baakiyalakshmi serial
விஜய் டிவியில் தற்போது நம்பர் 1 சீரியலாக இருப்பது பாக்கியலட்சுமி தொடர் தான். இந்த சீரியல் கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போதிலிருந்து விறுவிறுப்பான திரைக்கதை உடன் நகர்ந்து வரும் இந்த சீரியலுக்கு என மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. டிஆர்பி-யில் சன் டிவி சீரியல்களுக்கே டஃப் கொடுத்து வரும் சீரியலாக பாக்கியலட்சுமி தொடர் உள்ளது. இந்த சீரியல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
baakiyalakshmi serial Update
பாக்கியலட்சுமி சீரியலில் நடிகை சுசித்ரா பாக்கியாவாக நடிக்கிறார். அவரது கணவராக கோபி என்கிற கதாபாத்திரத்தில் சதீஷ் குமார் நடிக்கிறார். அதேபோல் கோபியின் இரண்டாவது மனைவியாக ராதிகா என்கிற கதாபாத்திரத்தில் ரேஷ்மா பசுபுலேட்டி நடித்து வருகிறார். இதுதவிர பாக்கியாவின் மகனாக எழில் கேரக்டரில் விஜே விஷாலும், பாக்கியாவின் முன்னாள் காதலனாக நடிகர் ரஞ்சித்தும் இந்த சீரியலில் நடித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... அன்று திருமணமான நடிகருடன் காதல்.. இன்று இரட்டை குழந்தைகளுக்கு அம்மா - யார் இந்த நடிகை தெரிகிறதா?
VJ Vishal Quit Baakiyalakshmi serial
விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலாக ஒளிபரப்பாகி பாக்கியலட்சுமி தொடரில் இருந்து தற்போது நடிகர் விஜே விஷால் விலகி இருக்கிறாராம். அவர் இந்த தொடரின் எழில் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். சீரியலில் அவரது கதாபாத்திரத்திற்கு பெரியளவில் ஸ்கோப் இல்லாததால் அந்த தொடரில் இருந்து அவர் விலகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக இவருக்கு ஜோடியாக அம்ரிதா கதாபாத்திரத்தில் நடித்த ரித்திகாவும் இந்த சீரியலில் இருந்து விலகினார்.
vj vishal
அவரைத் தொடர்ந்து தற்போது விஜே விஷாலும் விலகி உள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்காவது சீசனிலும் போட்டியாளராக கலந்துகொண்டு அசத்தினார். தற்போது அவர் பாக்கியலட்சுமி தொடரில் இருந்து விலகி உள்ளதால் அவருக்கு பதில் நடிக்கப்போகும் நடிகர் யார் என்கிற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. விரைவில் இதுகுறித்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... விடாமுயற்சிக்கு விடிவுகாலம் பொறந்தாச்சு... ஒருவழியாக ஆரம்பமாக உள்ள ஷூட்டிங் - எப்போ ரிலீஸ் தெரியுமா?