Malayalam English Kannada Telugu Tamil Bangla Hindi Marathi
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • மறந்து கூட நைட் டைம்ல இந்த காய்கறிகளை சாப்பிடாதீங்க! காரணம் தெரியுமா..?

மறந்து கூட நைட் டைம்ல இந்த காய்கறிகளை சாப்பிடாதீங்க! காரணம் தெரியுமா..?

இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாத சில காய்கறிகள் உள்ளன. நீங்கள் அவற்றை சாப்பிட்டால் உடனே நிறுத்துங்கள். அவை உங்கள் ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகளை உண்டாகும்.  

Kalai Selvi | Updated : May 25 2024, 09:31 PM
1 Min read
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • Google NewsFollow Us
17
Asianet Image

காய்கறிகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. காரணம், இவற்றில் இருக்கும் பல வகையான சத்துக்கள், உடலை ஆரோக்கியமாக வைத்து, நோய்கள் வராமல் தடுக்கிறது, ஆனால், இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாத சில காய்கறிகள் உள்ளன. நீங்கள் அவற்றை சாப்பிட்டால் உடனே நிறுத்துங்கள். அவை உங்கள் ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகளை உண்டாகும். அவை..

27
Asianet Image

பூண்டு: இரவில் நிம்மதியாக தூங்க வேண்டும் என்றால், பூண்டை சாப்பிடாதீர்கள். இல்லையெனில் வயிற்றில் வாயு, வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். 

37
Asianet Image

ப்ரோக்கோலி: இதில் இருக்கும் டிரிப்டோபான் என்ற பண்பு தூக்கம் கெடுக்கும். மேலும், இதில் ஏராளமான நார்ச்சத்துக்கள் இருப்பதால், இதை  இரவு உணவில் எடுத்துக் கொண்டால் ஜீரணமாவது கடினம்.

47
Asianet Image

வெங்காயம்: இது ஆரோக்கியத்திற்கு நல்லதாக கருதப்பட்டாலும், இரவில் அதிகமாக எடுத்துக்கொண்டால், தூக்கம் வராது. அதுமட்டுமின்றி, 
வயிற்று உப்புசம் பிரச்சனையும் வரும்.

57
Asianet Image

தக்காளி: இதையும் இரவு நேரத்தில் அதிகளவு எடுத்துக்கொள்ள கூடாது. மீறினால், வயிறு தொடர்பான பிரச்சனைகளை உண்டாக்கும். காரணம், அமில பண்புகள் இதில் உள்ளன. இது மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும். இதனால் தூங்குவதில் சிரமம் ஏற்படும்.

இதையும் படிங்க:   இரவு 9 மணிக்கு மேல் சாப்பிடும் நபரா..? உங்களுக்கு பக்கவாதம் வருவது கன்பார்ம்..!!

67
Asianet Image

இனிப்பு உருளைக்கிழங்கு: இதில் அதிகளவு கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து இருப்பதால், இரவில் எடுத்துக்கொண்டால், வீக்கம் மற்றும் வாயு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

இதையும் படிங்க:  மக்களே.. ஒருபோதும் லேட் நைட்ல சாப்பிடாதீங்க! எடை அதிகரிக்கும்..'இந்த' நேரத்தில் சாப்பிடுங்க..!!

77
Asianet Image

பச்சை பட்டாணி: இதில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மேலும் இது, ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்றாலும், இரவில் சாப்பிட்டால், வயிற்றில் வீக்கம் மற்றும் வாயு போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும். அதுமட்டுமின்றி, இது செரிமான அமைப்பில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். காரணம் இதில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Kalai Selvi
About the Author
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். Read More...
ஆரோக்கிய குறிப்புகள்
 
Recommended Stories
Top Stories