மிரட்டும் ஃபெராரி முதல்.. கிளாசிக் ரோல்ஸ் ராய்ஸ் வரை - நம்ம ஆண்டனி தாஸ் வீட்டில் வரிசைகட்டி நிற்கும் கார்கள்!
Sanjay Dutt Car Collection : பிரபல பாலிவுட் நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளரும் அரசியல்வாதியுமான சுனில் தத் அவர்களுடைய மகன் தான் பிரபல நடிகர் சஞ்சய் தத். அவர் கடந்த 1959 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Sanjay Dutt Audi
தந்தை மிகப்பெரிய நடிகராக திகழ்ந்து வந்ததால், சிறு வயதில் இருந்தே நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட அவர் "ராக்கி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் 1981ம் ஆண்டு பாலிவுட் திரையுலகில் ஹீரோவாக களமிறங்கினார். சுமார் 43 ஆண்டுகளுக்கும் மேலாக ஹிந்தி, கன்னடம், பஞ்சாபி மற்றும் தமிழ் என்று பல மொழிகளில் சிறந்த நடிகராக விளங்கி வருகிறார்.
Sanjay Dutt Ferrari 599 GTB
150 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள சஞ்சய் தத் முதல் முறையாக தமிழில் நடித்து வெளியான திரைப்படம் லியோ என்பது அனைவரும் அறிந்ததே. இதற்கு முன்னதாக கன்னட மொழியில் அவர் நடிப்பில் வெளியான கேஜிஎப் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. சுமார் 300 கோடி ரூபாய்க்கு சொந்தக்காரரான சஞ்சய் தத் பல ஆடம்பர சொகுசு கார்களை தன்வசம் வைத்துள்ளார்.
Sanjay Dutt Range Rover
சஞ்சய் தத் தனக்கு மிகவும் பிடித்த ஃபெராரி காரை மிக இளம் வயதிலேயே வாங்கியுள்ளார். ஃபெராரி 599 GTB என்கின்ற அந்த வாகனத்தின் விலை அப்பொழுதே சுமார் 1.3 கோடி என்று கூறப்படுகிறது. அவரிடம் விலை உயர்ந்த ஒரு ஆடி காரும் உள்ளது.
Sanjay Dutt Rolls Royce Ghost
இந்தியாவில் மிகக் குறைந்த அளவில் மட்டுமே இருக்கின்ற ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார் சஞ்சய் தத் அவர்களிடமும் இருக்கின்றது. இதன் விலை சுமார் 7:30 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல அண்மையில் ஒரு ரேஞ்ச் ரோவர் கார் ஒன்றையும் அவர் வாங்கியுள்ளார், அதன் விலை சுமார் 90 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.