Asianet News TamilAsianet News Tamil

ஜோதிகா ஐ லவ் யூ.. இந்த வருடத்தின் சிறந்த படம்.. Kaathal The Core - படம் பார்த்துவிட்டு மெய்மறந்த நடிகை சமந்தா!

Kaathal The Core : பிரபல நடிகை சமந்தா அண்மையில் வெளியான மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் காதல் திரைப்படம் குறித்து மனம் திறந்துள்ளார். இந்த ஆண்டின் சிறந்த படம் அது என்றும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Mammootty andJoythika Starring Kaathal The Core Malayalam Movie Review by Actress Samantha ans
Author
First Published Nov 27, 2023, 8:09 AM IST | Last Updated Nov 27, 2023, 8:09 AM IST

காதல் : தி கோர் என்ற அந்த மலையாள படம், சென்ற நவம்பர் 23ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இதில் மம்மூட்டி ஒரு ஓய்வுபெற்ற வங்கி அதிகாரியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய மேத்யூ தேவஸ்ஸியாகவும், ஜோதிகா அவரது மனைவி ஓமனா மேத்யூவாகவும் நடித்துள்ளனர். இந்த படம் கிராமத்து சமூகத்தின் மத்தியில் அவர்களின் திருமண இயக்கவியலைச் சுற்றி வருகிறது. 

அதிலும் குறிப்பாக காதல் : தி கோர் படத்தில் மம்மூட்டி இதுவரை அவர் ஏற்று நடிக்காத ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க, அது அவரது மனைவி ஜோதிகாவுடனான சண்டை மற்றும் அதன் விளைவாக ஏற்படும் சட்டப் போராட்டமாக மாறுகின்றது. இது மேத்யூவின் அரசியல் களத்தையும் அவர்களைச் சுற்றியுள்ள மக்களின் வாழ்க்கையையும் பாதிக்கிறது.

"தமிழ் சினிமாவில் தடம் பதித்த இயக்குனர்".. அமீர் பற்றி ஞானவேல் ராஜா கருத்து - பளிச்சென்று மறுத்த சுதா கொங்கரா!

விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தை உருவாக்கிய ஜியோ பேபி இயக்கிய இந்த காதல் : தி கோர் படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகின்றது. குறிப்பாக மம்மூட்டி மற்றும் ஜோதிகா இணைந்து நடித்த முதல் படம் இது. ஆதர்ஷ் சுகுமாரன் மற்றும் பால்சன் ஸ்கரியா திரைக்கதை அமைத்த இப்படத்தை துல்கர் சல்மானின் வேஃபேரர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 

Mammootty andJoythika Starring Kaathal The Core Malayalam Movie Review by Actress Samantha ans

இந்நிலையில் இந்த படம் குறித்து பேசியுள்ள பிரபல நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஒரு ஸ்டோரியில் "இந்த ஆண்டின் சிறந்த திரைப்படமாக இந்த திரைப்படம் மாறி உள்ளது. உங்களுக்கு நீங்களே ஒரு நன்மை செய்துகொள்ள வேண்டும் என்று விரும்பினால், தயவு செய்து இந்த திரைப்படத்தை சென்று பாருங்கள். மம்மூட்டி சார் நீங்கள் எனக்கு ஹீரோ, உங்களுடைய இந்த கதாபாத்திரத்தில் இருந்து மீண்டு வர எனக்கு பல காலம் பிடிக்கும், ஜோதிகா ஐ லவ் யூ" என்று தனது பதிவில் அவர் கூறியுள்ளார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios