அச்சு அசல் அப்படியே இருக்கே! அயோத்தி பால ராமர் கண்களோடு.. கேப்டன் கண்களை ஒப்பிட்டு வைரலாக்கும் ரசிகர்கள்!
அயோத்தி பால ராமர் கண்களோடு, கேப்டன் விஜயகாந்தின் கண்களை ஒப்பிட்டு ரசிகர்கள் சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்றை வைரலாக்கி வருகின்றனர்.
உத்திரபிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ஆம் தேதி பிரமாண்டமாக நடந்து முடிந்தது. இதில் 5 வயது பாலகனாக அருள் பாலிக்கும் ராமரின் சிலை, சடங்குகள் பூஜைகள் செய்யப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்டது.
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், நடந்த ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில், பிரதமர் மோடி, யூபி முதல்வர் யோகி ஆதித்யநாத், நடிகர் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, தனுஷ், உள்ளிட்ட ஏராளமான அரசியல் பிரபலங்களும், சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
பாரம்பரிய நாகரா வடிவில் கட்டப்பட்டுள்ள இந்த ராமர் கோவில், 380 அடி நீளமும், 250 அடி அகலமும் கொண்டது. இது தரையில் இருந்து சுமார் 161 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 392 தூண்களும், 44 கதவுகளும் உள்ளன. கோவில் முழுக்க உள்ள சுவர்களிலும், தூண்களிலும் தெய்வங்களின் உருவங்கள் மற்றும் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளது.
ram mandir ayodhya
அதேபோல் ராமர் பிரதிஷ்டை செய்யப்பட்ட 51 அங்குல சிலையை, வடிவமைக்க பயன்படுத்தப்பட்ட கல் சுமார் 2.5 பில்லியன், அதாவது 250 கோடி ஆண்டுகள் பழமையானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்திய நடிகர் ஆனந்தராஜ் மகளின் திருமணம்! வைரலாகும் வெட்டிங் போட்டோஸ்!
இது அரிய வகை கிரானைட் கல் ஆகும். இது காலநிலை மாறுபாட்டை எதிர்கொள்ள கூடியது என்றும், இந்த கல்லுக்கு பராமரிப்பு என்பது மிகவும் குறைவாகவே தேவைப்படும் எனவும் என்ஐஆர்எம், இயக்குனர் எச் எஸ் வெங்கடேஷ் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த கற்கள் பூமி உருவான பிறகு உருகியை எரிமலை குழம்பு குளிர்ந்த போது, கிரானைட் பாறைகளாக மாறிய தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பால ராமர் சிலை, தன்னை தரிசிக்க வரும் பக்தர்களை பார்த்து அழகாக சிரிப்பது போன்றும், அவர்களை கண் கொண்டு பார்ப்பது போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ராமர் சிலையின் கண்களை, சமீபத்தில் மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் கண்களோடு ஒப்பிட்டு சமூக வலைத்தளத்தில் அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். நெட்டிசன்களும் பார்ப்பதற்கு அச்சு அசல் அப்படியே இருப்பதாக தெரிவித்து லைக்குகளை குவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.