Blue Star Review: அசோக் செல்வன் - சாந்தனு நடிப்பில் வெளியாகியுள்ள ப்ளூ ஸ்டார்.! டாப்பா.. ஃபிளாப்பா? விமர்சனம்!
இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் இன்று வெளியாகியுள்ள, ப்ளூ ஸ்டார் திரைப்படம் எப்படி இருக்கிறது என்று, ரசிகர்கள் கூறியுள்ள ட்விட்டர் விமர்சனம் இதோ...
இயக்குனர் என்பதை தாண்டி, தன்னுடைய துணை இயக்குனர்களின் இயக்குனர் கனவை தயாரிப்பாளராக மாறி நிறைவேற்றி வருகிறார் பா.ரஞ்சித். இவர் தயாரிப்பில் ஏற்கனவே வெளியான பரியேறும் பெருமாள் உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, தற்போது இவர் தயாரிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ப்ளூ ஸ்டார்.
இப்படத்தில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி, கலையரசன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படம் இன்று அதாவது (ஜனவரி 25-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் தொடர்ந்து தங்களின் விமர்சனங்களை சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்து வரும் நிலையில், ரசிகர்களின் விமர்சனம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்திய நடிகர் ஆனந்தராஜ் மகளின் திருமணம்! வைரலாகும் வெட்டிங் போட்டோஸ்!
ரசிகர் ஒருவர் இப்படம் குறித்து போட்டுள்ள பதிவில், "ப்ளூ ஸ்டார் ஒரு சிறந்த விளையாட்டு அரசியல் திரைப்படம். இப்படத்தின் மூலம் தன்னுடைய மற்றொரு விதமான நடிப்பை அசோக் செல்வன் வெளிப்படுத்தியுள்ளார். ஷாந்தனுவும் நடிப்பும் அபாரம். பிரித்வி மற்றும் பக்ஸ் கவனம் ஈர்க்கின்றனர். படத்தின் டயலாக், பிஜிஎம், போன்றவை நெருப்பாக உள்ளது. இந்த வார இறுதியில் இப்படத்தை தரவ விட்டு விடாதீர்கள் என தெரிவித்துள்ளார்.
மற்றொரு ரசிகர் ப்ளூஸ்டார் படம் குறித்து கூறியுள்ள விமர்சனத்தில், கொஞ்சம் ஃபார்ல், ஆனால் திடமான விளையாட்டு டிராமா. 2 வது பாதி கோஞ்சம் நீளமாக உள்ளது கதை கணிக்க கூடியதாகவும் இருந்தது. அதை தவிர எந்த பிரச்னையும் படத்தில் இல்லை. அனைவரது நடிப்பும் நன்றாக இருந்தது. அசோக்கின் அம்மா கேரக்டர் வேற லெவல். அசோக் செல்வன் - கீர்த்தி ரொமான்ஸ் போர்ஷன் மிகவும் பிடித்திருந்தது. ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது நல்ல படம் என கூறி இப்படத்திற்கு 10க்கு 7.75 மதிப்பீடு கொடுத்துள்ளார்.
இதை தொடர்ந்து இப்படத்தை பாராட்டியுள்ள ரசிகர், "ஒரு Sports படத்தை பயங்கர கொண்டாட்டங்களோடு, எந்த இடத்திலும் தடம் மாறாமல், ஓர் சிறந்த அரசியல் படமாக எடுக்க முடியும் என்பதற்கு #BlueStar ஒரு சிறந்த சாட்சியம், மிகப்பெரிய முரண்களை அன்பால் வென்றுள்ளார் ப்ளூ ஸ்டார் மூலம் இயக்குநர் நிரூபித்துள்ளதாக தெரிவித்துள்ளார்".
இந்த படத்தின் திரைக்கதை மற்றும் கதை மிகவும் உன்னதமான முறையில் காட்டப்பட்டிருந்தது. இந்தப் படத்துக்கு இசைதான் மிகப்பெரிய ஹைலைட். அசோக் செல்வன் & சாந்தனு அவர்களின் நடிப்பு அருமை. கீர்த்தி பாண்டியன் எப்போது வந்தாலும் ஸ்க்ரீன் பிரசன்ஸ், மற்றும் நடிப்பில் அசத்தியுள்ளார். திரைப்படம் கிரிக்கெட்டில் அரசியலைக் காட்டுகிறது மற்றும் அவர்கள் ஒன்றிணைந்தால் அதை எப்படி முறியடிப்பார்கள் என்று முடிகிறது. எனக்கு பிடிக்காத விஷயங்கள்!! எப்பொழுதும் அடக்குமுறை ஏன்? தமிழ் திரைப்படங்கள் மெல் வகை, கீல் வகை சார்ந்த திரைப்படங்களை எடுப்பதை நிறுத்த வேண்டும் !! மொத்தத்தில் படம் பிடித்தது என தெரிவித்துள்ளார்.