MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • குழந்தையும் ... தெய்வமும் ஒன்னுன்னு சும்மாவா சொன்னாங்க! மகள் பிறந்தநாளில் சினேகா வெளியிட்ட கியூட் போட்டோஸ்!

குழந்தையும் ... தெய்வமும் ஒன்னுன்னு சும்மாவா சொன்னாங்க! மகள் பிறந்தநாளில் சினேகா வெளியிட்ட கியூட் போட்டோஸ்!

நடிகை சினேகா தன்னுடைய மகள், 4-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள கியூட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில், வாழ்த்துக்களை குவித்து வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
Published : Jan 24 2024, 08:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

கோலிவுட் திரையுலகின் கியூட் நட்சத்திர ஜோடியாக வலம் வந்துகொண்டிருக்கும், சினேகா மற்றும் பிரசன்னாவின் மகள் ஆத்யந்தாவின் 4-ஆம் ஆண்டு பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில்.. சினேகா சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.
 

26

சினேகா - பிரசன்னா ஜோடி.. 'அச்சமுண்டு அச்சமுண்டு' என்கிற படத்தில் இணைந்து நடித்த போது காதலிக்க துவங்கிய நிலையில், 2012-ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் காதலுக்கு அடையாளமாக இந்த தம்பதிக்கு விஹான் என்கிற மகனும் ஆத்யந்தா என்கிற மகளும் உள்ளனர்.

Ajith Help: மகனை கண்டுகொள்ளாத விஜய்! தவித்து நின்ற சஞ்சய்க்கு.. பெரிய மனசுடன் அஜித் செய்த மிகப்பெரிய உதவி!

36

விஹானுக்கு தற்போது 7 வயதாகும் நிலையில், இன்று சினேகாவின் மகள் ஆத்யந்தா தன்னுடைய 4-ஆவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். சினேகா மகளுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை கூறி, அவரின் கியூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

46

சினேகாவின் குழந்தைகள் இருவரும், ஆடு, கோழி குஞ்சு, நாய் என அணைத்து விலங்குகள் மீதும்... எந்த ஒரு பாகுபாடும் இன்றி அணைத்து மனிதர்கள் மீதும் பாசம் காட்டுவதை இந்த புகைப்படங்கள் உணர்த்தியுள்ளது.

இனி தினேஷுடன் சேர வாய்ப்பே இல்லை... இரண்டாவது திருமணத்திற்கு தயாரான ரச்சித்தா! மாப்பிள்ளை யார் தெரியுமா?

56

மேலும் இந்த புகைப்படங்களை வெளியிட்டு... சினேகா போட்டுள்ள பதிவில், பிறந்தநாள் வாழ்த்துக்கள், என் பொம்மை போல் இருக்கும் மகளுக்கு. எங்கள் வாழ்க்கையில் நீங்கள் கொண்டு வந்த அனைத்து அன்பு மற்றும் மகிழ்ச்சிக்காக நான் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். நான் தாழ்வாக இருக்கும்போது, ​​எனக்கு ஒரு நண்பன் தேவைப்படும்போது, நீ என் அம்மாவாகிவிடுகிறாய். நீங்கள் ஒரு தூய்மையான ஆத்மா, கடவுள் உங்களுக்கு வாழ்க்கையில் எல்லா மகிழ்ச்சியையும் தரட்டும். நீங்கள் என்றும் எதையும் மாற்ற அனுமதிக்காதீர்கள். நாங்கள் உன்னை மிகவும் நேசிக்கிறோம் என் தங்கமே என தெரிவித்துள்ளார்

66

மேலும் சினேகா பதிவிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து... கடவுள் எப்படி பாகுபாடு பார்ப்பது இல்லையோ அப்படி தான் குழந்தைகளும். எல்லோர் மீதும் பாசம் காட்டுவார்கள். குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பதை இந்த புகைப்படங்கள் பிரதிபலிப்பதாக தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சன் டிவி 'கயல்' சீரியல் நாயகிக்கு அடித்த ஜாக்பாட்! திருமணத்திற்கு பின் கிடைத்த வாய்ப்புக்கு குவியும் வாழ்த்து

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved