MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ரியல் லைஃபிலும் ‘ராஜா ராணி’ ஆக வாழும் பகத் பாசில் - நஸ்ரியா ஜோடியின் சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா?

ரியல் லைஃபிலும் ‘ராஜா ராணி’ ஆக வாழும் பகத் பாசில் - நஸ்ரியா ஜோடியின் சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா?

மலையாள திரையுலகில் நட்சத்திர ஜோடியாக வலம் வரும் பகத் பாசில் - நஸ்ரியா ஜோடியின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Ganesh A
Published : Dec 20 2023, 03:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Nazriya, fahadh faasil

Nazriya, fahadh faasil

ஸ்கூல் படிக்கும்போதில் இருந்தே படங்களில் நடித்து வந்த நஸ்ரியா, கடந்த 2013--ம் ஆண்டு தான் ஹீரோயினாக அறிமுகமானார். தமிழில் 18 வயதிலேயே ஹீரோயினாக அறிமுகமான நஸ்ரியா, முதன்முதலில் நடித்த படம் நேரம். அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய இப்படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடித்திருந்தார். அப்படத்தில் இடம்பெற்ற பிஸ்தா பாடல் வைரல் ஹிட் அடித்ததற்கு நஸ்ரியாவின் நடனமும் முக்கிய காரணம்.

26
Nazriya Nazim

Nazriya Nazim

இதையடுத்து அவருக்கு கோலிவுட்டில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் ராஜா ராணி. அட்லீ இயக்கிய இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் நஸ்ரியா. இவர்களின் கியூட்டான கெமிஸ்ட்ரி அப்படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய பங்காற்றியது. அதுமட்டுமின்றி அப்படத்தில் துறுதுறுவென நடித்திருந்தாலும் விபத்தில் சிக்கும் காட்சியில் இவரின் நடிப்பை பார்த்து கண்கலங்காதவர்கள் இருக்க முடியாது அந்த அளவுக்கு தத்ரூபமாக நடித்திருப்பார்.

36
Nazriya Birthday

Nazriya Birthday

பின்னர் தனுஷுடன் நையாண்டி, ஜெய்க்கு ஜோடியாக திருமணம் எனும் நிக்கா ஆகிய படங்களில் நடித்த நஸ்ரியா, சினிமாவில் உச்சத்தில் இருந்தபோது திருமணம் செய்துகொண்டார். இவர் மலையாள நடிகர் பகத் பாசிலை கடந்த 2014-ம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டார். அப்போது நஸ்ரியாவுக்கு வெறும் 19 வயது தான். ஆனால் பகத் பாசில் அவரை விட 32 வயது மூத்தவர். பெங்களூரு டேஸ் என்கிற மலையாள படத்தில் நடித்தபோது காதல் மலர்ந்ததால் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

46
Nazriya movies

Nazriya movies

பகத் பாசில் - நஸ்ரியா ஜோடிக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இதையடுத்து 6 ஆண்டுகளுக்கு பின்னர் டிரான்ஸ் என்கிற மலையாள படம் மூலம் மீண்டும் சினிமாவில் தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸை தொடங்கினார் நஸ்ரியா. இதையடுத்து நானிக்கு ஜோடியாக அடடே சுந்தரா என்கிற தெலுங்கு படத்தில் நடித்த அவர், தற்போது தமிழில் சூர்யாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளார். இப்படத்தை சுதா கொங்கரா இயக்க உள்ளார்.

56
Nazriya husband Fahadh faasil

Nazriya husband Fahadh faasil

இப்படி சினிமாவில் மீண்டும் பிசியாகி வரும் நடிகை நஸ்ரியா இன்று தனது 29-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்து மழை பொழிந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில், பகத் பாசில் மற்றும் நஸ்ரியா ஜோடியின் சொத்து மதிப்பு பற்றி தற்போது பார்க்கலாம். நடிகை நஸ்ரியா தற்போது ஒரு படத்துக்கு ரூ.3 முதல் 4 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.

66
fahadh Faasil, Nazriya Net worth

fahadh Faasil, Nazriya Net worth

அதேபோல் அவரது கணவருக்கு தமிழ் தெலுங்கு, மலையாளம் என பிசியாக நடித்து வருவதால் அவருக்கும் ரூ.10 கோடி வரை சம்பளம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த ஜோடிக்கு சொந்தமாக கொச்சியில் பிரம்மாண்ட பங்களா ஒன்று உள்ளது. அதன் மதிப்பு பல கோடி இருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் இவர்கள் இருவருமே கார்கள் மீது அதீத ஆசை கொண்டவர். இவர்களிடம் டிபண்டர், போர்ஷ், ரேஞ்ச் ரோவர் என எக்கச்சக்கமான சொகுசு கார்கள் உள்ளன. இப்படி ரியல் லைஃபிலும் ராஜா ராணியாக வாழும் பகத் பாசில் - நஸ்ரியா ஜோடியின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.40 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... சோனியா அகர்வாலா இது? எலும்பும் தோலுமாக ஆளே அடையாளம் தெரியாதது போல் மாறிட்டாரே! ஷாக்கிங் போட்டோஸ்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved