- Home
- Gallery
- சோனியா அகர்வாலா இது? எலும்பும் தோலுமாக ஆளே அடையாளம் தெரியாதது போல் மாறிட்டாரே! ஷாக்கிங் போட்டோஸ்
சோனியா அகர்வாலா இது? எலும்பும் தோலுமாக ஆளே அடையாளம் தெரியாதது போல் மாறிட்டாரே! ஷாக்கிங் போட்டோஸ்
நடிகை சோனியா அகர்வால் உடல் எடை குறைத்து மிகவும் மெலிந்த தோற்றத்தில் காட்சியளிப்பதை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிப்போய் உள்ளனர்.

soniya agarwal
செல்வராகவன் இயக்கிய காதல் கொண்டேன் படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக காலடி எடுத்து வைத்தவர் சோனியா அகர்வால். அப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அப்படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து கோவில் திரைப்படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தார் சோனியா. இப்படமும் ஹிட் ஆனதை அடுத்து மதுர திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். இப்படி தமிழில் இவர் நடித்த முதல் மூன்று படங்களுமே ஹாட்ரிக் ஹிட் அடித்தன.
soniya agarwal slim look
இதையடுத்து 7ஜி ரெயின்போ காலனி படத்துக்காக செல்வராகவன் உடன் மீண்டும் இணைந்தார் சோனியா. இப்படத்தில் அரவிந்த் கிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்தார். இப்படத்தின் போது சோனியா அகர்வாலுக்கும் செல்வராகவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இப்படம் ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதை தொடர்ந்து சோனியா அகர்வாலும் செல்வராகவனும் கடந்த 2006-ம் ஆண்டு குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
soniya agarwal latest photos
திருமணத்துக்கு பின்னர் சினிமாவை விட்டு விலகிய சோனியா அகர்வால், நான்கே ஆண்டுகளில் செல்வராகவன் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். செல்வராகவனை பிரிந்த பின்னர் மீண்டும் சினிமாவில் தன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார் சோனியா. ஆனால் ஆரம்பத்தில் கிடைத்த பட வாய்ப்புகள் இரண்டாவது இன்னிங்சில் அவருக்கு கிடைக்கவில்லை. இதனால் அவரது கெரியரும் கடும் சரிவை சந்தித்தது.
soniya agarwal weight loss
இந்நிலையில் நடிகை சோனியா அகர்வாலின் சமீபத்திய புகைப்படங்கள் பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிப்போய் உள்ளனர். மிகவும் ஒல்லியாகி எலும்பும் தோலுமாக ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போய் இருக்கிறார். அவரைப் பார்த்து இது சோனியா அகர்வால் தானா என கேட்கும் அளவுக்கு மிகவும் மெலிந்து காட்சியளிக்கிறார். தற்போது 41 வயதாகும் நடிகை சோனியா அகர்வால், இரண்டாவது திருமணம் இதுவரை செய்துகொள்ளவில்லை.
இதையும் படியுங்கள்... ராஷ்மிகாவின் Deep Fake வீடியோ பரப்பியவர்களை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் - சிக்கியது எப்படி?