பார்க்க பார்க்க திகட்டாத அழகு..! சேலையிலும் அன்லிமிடெட் கவர்ச்சி காட்டி ரசிகர்களை மெர்சலாக்கிய மாளவிகா மோகனன்
தங்கலான் பட நாயகி மாளவிகா மோகனன், பச்சை நிற சேலையில் வித விதமாக கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
malavika mohanan
கேரளாவில் இருந்து கோலிவுட்டுக்கு படையெடுத்து வந்து பிரபலமான நடிகைகளில் மாளவிகா மோகனனும் ஒருவர். மலையாள படங்களில் நடித்து வந்த மாளவிகா, தமிழில் முதல் படத்திலேயே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படத்தின் மூலம் கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தார் மாளவிகா.
Actress malavika mohanan
பேட்ட படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த மாளவிகாவை ஹீரோயினாக அறிமுகப்படுத்தியது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான். அவர் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் மூலம் ஹீரோயினாக காலடி எடுத்து வைத்தார் மாளவிகா. அறிமுகமான முதல் இரண்டு படத்திலேயே விஜய், ரஜினி என இரு டாப் ஸ்டார்களுடன் நடித்ததால் முன்னணி நடிகையாக உயர்ந்தார் மாளவிகா.
malavika mohanan in saree
விஜய்க்கு ஜோடியாக நடித்த பின்னர் மாளவிகாவுக்கு பாலிவுட் பட வாய்ப்புகளும் குவியத் தொடங்கின. அதுமட்டுமின்றி தெலுங்கிலும் பிரபாஸுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார் மாளவிகா. இப்படி பான் இந்தியா அளவில் பிசியான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார் மாளவிகா மோகனன்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Thangalaan actress malavika mohanan
தற்போது அவர் நடிப்பில் தங்கலான் என்கிற பிரம்மாண்ட திரைப்படம் தயாராகி உள்ளது. பா.இரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தில் ஆதிவாசி பெண்ணாக நடித்துள்ளார் மாளவிகா. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு ரெடியாகி வருகிறது. இப்படத்தின் டப்பிங் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
malavika mohanan Latest Photos
தங்கலான் படத்தின் டப்பிங் பணிக்காக மும்பையில் இருந்து சென்னை வந்த நடிகை மாளாவிகா மோகனனின் ஏர்போர்ட் கிளிக்ஸ் வைரலாகி வருகிறது. பச்சை நிற சேலையில், கவர்ச்சி புயலாக மாளவிகா மோகனன் சென்னை விமான நிலையம் வந்திறங்கியபோது எடுத்த புகைப்படங்களுக்கு இன்ஸ்டாகிராமில் லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இதையும் படியுங்கள்... அட ச்சீ... பிக்பாஸ் வீட்ல இதெல்லாம் நடக்குதா? காதல் ஜோடியின் காம லீலைகளால் முகம் சுளிக்கும் ரசிகர்கள்