Asianet News TamilAsianet News Tamil

அட ச்சீ... பிக்பாஸ் வீட்ல இதெல்லாம் நடக்குதா? காதல் ஜோடியின் காம லீலைகளால் முகம் சுளிக்கும் ரசிகர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட காதல் ஜோடி இருவர் செய்த அருவருக்கத்தக்க செயல் காண்போரை முகம்சுளிக்க வைத்துள்ளது.

Hindi BiggBoss contestants samarth jurel forcefully kissed isha malviya video viral gan
Author
First Published Nov 26, 2023, 12:15 PM IST | Last Updated Nov 26, 2023, 12:15 PM IST

வெளிநாட்டில் பேமஸாக இருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இந்தியாவிலும் பல்வேறு மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் இந்தியில் தான் பிக்பாஸ் நிகழ்ச்சி முதன்முதலில் நடத்தப்பட்டது. இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்தியில் இதுவரை 16 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. தற்போது இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 17-வது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்தியை தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. இதில் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். அதேபோல் தெலுங்கில் நாகார்ஜுனாவும், கன்னடத்தில் ஜூனியர் என்.டி.ஆரும், மலையாளத்தில் மோகன்லாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர். ஆனால் இவர்களுக்கெல்லாம் பிக்பாஸ் ஹோஸ்டிங்கில் சீனியராக இருப்பவர் சல்மான் கான் தான்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அவர் தொகுத்து வழங்கும் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 17-வது சீசனில் தான் ஒரு அருவருக்கத்தக்க சம்பவம் நடந்துள்ளது. தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழிகளில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் இல்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அண்மையில் கூட தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரதீப்பால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறி அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றினர்.

ஆனால் இந்தி பிக்பாஸில் அதையெல்லாம் மிஞ்சும் அளவுக்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதில் சம்ரத் ஜுரேல், இஷா மல்வியா என்கிற காதல் ஜோடி போட்டியாளராக கலந்துகொண்டுள்ளனர். இதில் சம்ரத் ஜுரேல் அடிக்கடி இஷா மல்வியாவிடம் அத்துமீறி வந்துள்ளது. படுக்கை அறையில் ஒரே பெட்டில் இருவரும் போர்வையை பொத்திக் கொண்டு செய்த சில்மிஷ வேலைகள் மற்றும் பாத்ரூமில் இஷாவை பலவந்தமாக சம்ரத் முத்தம் கொடுத்தது போன்ற வீடியோக்களை பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் எப்படி அனுமதிக்கிறார்கள் என கேள்வி எழுப்பி வருவதோடு, அந்நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என குரல் எழுப்பி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... அவ்ளோ தான் உனக்கு லிமிட்டு... ஆழ்வார்பேட்டை ஆண்டவராக மாறி பூர்ணிமாவுக்கு செம்ம டோஸ் கொடுத்த கமல்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios