MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • கூச்சமே இல்லாம திருடிருக்காங்க... கேப்டன் மில்லர் என்னோட கதை - ‘எதிர்நீச்சல்’ வேல ராமமூர்த்தி பகீர் புகார்

கூச்சமே இல்லாம திருடிருக்காங்க... கேப்டன் மில்லர் என்னோட கதை - ‘எதிர்நீச்சல்’ வேல ராமமூர்த்தி பகீர் புகார்

கேப்டன் மில்லர் படத்தின் கதை தான் எழுதிய நாவலின் கதையை திருடி எடுக்கப்பட்டு உள்ளதாக நடிகரும், எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Jan 21 2024, 03:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
vela ramamoorthy, Dhanush

vela ramamoorthy, Dhanush

நடிகர் தனுஷ் நடிப்பில் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த படம் கேப்டன் மில்லர். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருந்தார். மேலும் கன்னட சூப்பர்ஸ்டார் ஷிவ ராஜ்குமார், நடிகர் சந்தீப் கிஷான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து இருந்தார். இப்படம் வசூலை வாரிக்குவித்து வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Captain Miller

Captain Miller

கேப்டன் மில்லர் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வரும் நிலையில், நடிகரும், புகழ்பெற்ற எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி, கேப்டன் மில்லர் படத்தின் கதை தன்னுடையது என்றும், தான் எழுதிய பட்டத்து யானை என்கிற நாவலின் கதையை திருடி தான் அப்படத்தை எடுத்துள்ளதாக பகீர் குற்றச்சாட்டை முன்வைத்து உள்ளார். கேப்டன் மில்லர் படத்தின் கதை திருட்டு சர்ச்சை குறித்து வேல ராமமூர்த்தி காட்டமாக பேசி உள்ளார்.

இதையும் படியுங்கள்... அயல் நாட்டிலும் அமோக வரவேற்பு.. தனுஷுக்கு புதிய பெருமையை தேடித்தந்த கேப்டன் மில்லர் - அது என்னனு தெரியுமா?

35
Captain Miller Story theft

Captain Miller Story theft

அவர் கூறுகையில், கேப்டன் மில்லர் எனது பட்டத்து யானை நாவலை பின்னணியாக கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதாக கேள்விப்பட்டேன். நான் எழுதிய அந்த நாவலில், ஹீரோ பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றிவிட்டு பின்னர் அதிலிருந்து எப்படி விலகி தன் நாட்டு சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றான் என்பது தான் கதைச்சுருக்கம். அதனை தங்களுக்கு ஏற்ப சில மாற்றங்களை செய்து கேப்டன் மில்லர் என்கிற பெயரில் படத்தை எடுத்துள்ளனர்.

45
Vela ramamoorthy

Vela ramamoorthy

பட்டத்து யானை நாவலை எழுதிய நான் இன்னும் உயிரோடு தான் இருக்கிறேன். என்னிடம் ஒரு வார்த்தை கேட்கவில்லை, அதற்கான அனுமதியும் வாங்காமல் படத்தை எடுத்திருப்பது கொஞ்சம் கூட அசிங்கமா இல்லையா. எனது ஊர் மக்களின் வாழ்வியலை நான் எழுதுகிறேன், அதை கூச்சமே இல்லாம திருடிவிடுகின்றனர். கேப்டன் மில்லர் மட்டுமில்ல இன்னும் சில படங்களில் என்னுடைய கதைகளின் வரும் சீன்கள் திருடி எடுத்துள்ளார்கள்.

55
Dhanush

Dhanush

ஆர்.ஆர்.ஆர் படத்தில் கூட என்னுடைய நாவலில் இருந்து சில காட்சிகளை திருடி ராஜமவுலி எடுத்துள்ளதாக எனது வாசகர்கள் மூலம் கேள்விப்பட்டேன். இவர்களிடம் சென்று ஆதாரத்துடன் கேள்வி கேட்டால் நம்மையே அசரவைக்கும் அளவுக்கு பதில் வரும். அப்படியே புகார் தந்தாலும் வலுத்தவர்கள் பக்கம் தான் நியாயம் பேசுவாங்க. தமிழ் சினிமாவில் இப்படி அடிக்கடி நடப்பது எனக்கு அசிங்காக உள்ளது. ஒரு படைப்பாளியாக இது மிகவும் வேதனையளிக்கிறது என அவர் மனக்குமுறல்களை கொட்டி உள்ளார்.

இதையும் படியுங்கள்... அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்... கோலிவுட்டில் இருந்து முதல் ஆளாக கிளம்பி சென்ற தனுஷ், ரஜினி

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தனுஷ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved