Dhanush Captain Miller : பிரபல நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் அந்த படம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

பிரபல நடிகர் தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன், இயக்கத்தில் கடந்த ஜனவரி 12ஆம் தேதி வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது கேப்டன் மில்லர் திரைப்படம். இந்த திரைப்படத்தில் பிரபல கன்னட திரை உலக சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஆங்கிலேயர் காலத்தில் நடக்கின்ற ஒரு கதைக்களம் கொண்டு அமைக்கப்பட்ட இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தை பார்த்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் படக்குழுவை வெகுவாக பாராட்டி உள்ளது அனைவரும் அறிந்தது. இந்த பொங்கலுக்கு வெளியான அனைத்து திரைப்படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் கேப்டன் மில்லர் திரைப்படமும் தமிழகத்திலும் பிற மாநிலங்களிலும், வெளிநாட்டிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. 

தெறி ஹிந்தி ரீமேக்கில் இணைந்த அட்லீ! ஆனால் இயக்குனர் இல்லை.. விஜய் - சமந்தா ரோலில் நடிக்க போறது யார் தெரியுமா?

இந்நிலையில் இந்த திரைப்படத்தை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் விநியோகித்துள்ள பிரபல லைகா நிறுவனம் தற்பொழுது வெளியிட்டுள்ள தகவலின் படி வெளிநாட்டில் தனுஷ் திரைப்படத்திற்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வரவேற்பு கொண்ட திரைப்படமாக கேப்டன் மில்லர் மாறி உள்ளது என்றும் இது தனுஷின் திரை வாழ்க்கையில், வெளிநாட்டில் ஒரு மாபெரும் சாதனை படைத்த திரைப்படம் என்றும் தெரிவித்துள்ளது. 

Scroll to load tweet…

இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கேப்டன் மில்லர் படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் மூன்றாம் பாகத்தை எடுக்க அருண் மாதேஸ்வரன் ஆயத்தமாகி வருகிறார் என்று கூறப்படுகிறது. ராக்கி மற்றும் சாணி காகிதம் உள்ளிட்ட படங்களை இயக்கி வெற்றிகண்ட இயக்குனர் தான் அருண் மாதேஸ்வரன். 

அயலான் பட வெற்றி.. மாஸ் கம் பேக் கொடுத்த காமெடியன் கருணாகரன் - இப்போ எத்தனை படங்கள் கைவசம் இருக்கு தெரியுமா?