நீண்ட ஆண்டுகள் கழித்து அற்புதம்மாள் முகத்தில் சிரிப்பை பார்க்கிறேன்...கார்த்திக் சுப்புராஜ் எமோஷனல் போஸ்ட்...
Director Karthik subbaraj tweet about perarivaalan release: சின்னத் திரையில் குறும்படங்கள் மூலம் வரவேற்பை பெற்று, தமிழில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான 'பீட்சா’ திரைப்படத்தின் மூலம், இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ்.
karthik subbaraj
முதல் படத்தின் மூலம் மக்களின் பேர் ஆதரவை பெற்ற கார்த்திக் சுப்புராஜ், தமிழ் சினிமாவில், குறுகிய காலத்திற்குள் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக மாறினார். அதன் பின் ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’ என சில படங்களை இயக்கினார்.
karthik subbaraj
இதையடுத்து, கடந்த 2019ம் ஆண்டு தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த்தை வைத்து ‘பேட்ட’ படத்தை இயக்கினார். இந்தப் படம் வெளியாகி இவருக்கு நல்ல பெயரை வாங்கி தந்தது.
karthik subbaraj
கடைசியாக இவரது இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் மகான் திரைப்படம் வெளியானது. இப்படத்தில், விக்ரமின் மகன் துருவ்வும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
karthik subbaraj
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், தன்னுடைய திரை பயணத்தில் தனக்கென தனி இடத்தை தக்க வைத்து கொள்வார். ஓர் வித்தியானமான பாணியில் இவரது திரைக்கதை இருக்கும். சமீபத்தில் வெளியான, மகான் திரைப்படத்திலும், காந்தியின் கொள்கைகளைப் பற்றி பேசி சர்ச்சையில் சிக்கினார் கார்த்திக் சுப்புராஜ்.
perarivalan
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி அவரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
perarivalan
இந்த தீர்ப்பால் பேரறிவாளன் மற்றும் அவரது குடும்பத்தினரை மகிழ்ச்சியில் உள்ளனர். இதற்கு வரவேற்பு தெரிவித்து தமிழக முதல்வர் ஸ்டாலின், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
perarivalan
அந்த வகையில், இயக்குநர் மிஷ்கின், கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், ''பேரறிவாளன் விடுதலையால் அற்புதம்மாள் முகத்தில் அந்த சிரிப்பைக் காண பல ஆண்டுகள் காத்திருந்தேன்'' என பதிவிட்டுள்ளார்.
perarivalan
முன்னதாக, தனது விடுதலை தொடர்பாக பேசிய பேரறிவாளன், தமிழர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்ததுடன், எனது அம்மாவின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி தான் இது என்று பேசிஇருந்தது குறிப்பிடக்கத்தக்கது.