MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • எதற்கெடுத்தாலும் சட்டம் பேசும் ஜெயம் ரவி ஜெயித்தாரா? இல்லையா? பிரதர் திரை விமர்சனம்!

எதற்கெடுத்தாலும் சட்டம் பேசும் ஜெயம் ரவி ஜெயித்தாரா? இல்லையா? பிரதர் திரை விமர்சனம்!

Jayam Ravi Brother Movie Review: சட்டம் பேசும் கார்த்திக், குடும்பப் பிரச்சனைகளில் சிக்குகிறார். அவரது பயணம், குடும்ப உறவுகளின் சிக்கல்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறது. இயக்குநர் ராஜேஷ், குடும்பக் கதையை நகைச்சுவையுடன் கலந்து சொல்லியிருக்கிறார்.

2 Min read
Author : Rsiva kumar
| Updated : Nov 01 2024, 08:42 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Brother Movie Review, Jayam Ravi

Brother Movie Review, Jayam Ravi

Jayam Ravi Brother Movie Review: ஏன், எதற்கு, எப்படி என்று கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தால் தான் அறிவு வளரும் பள்ளி பருவத்தில் ஆசிரியர் கற்றுக் கொடுக்க அதையே வேத வாக்காக எடுத்து அவரிடமே கேள்வி கேட்டு திட்டும் வாங்குகிறார் கதையின் நாயகன் கார்த்திக் (ஜெயம் ரவி). அங்கே முடிந்தால் சட்டக்கல்லூரி தேர்வுக்கு வருகிறார். அங்கு சட்டக்கல்லூரி மாணவருக்கு கல்லூரி பேராசிரியரே தேர்வு எழுத அதனை தனது செல்போனில் வீடியோ எடுத்து மீடியாவுக்கு அனுப்புவேன் என்று சொல்ல,வேண்டாம் இது பெரிய இடத்து விவகாரம் என்று பேராசிரியர் சொல்ல, இறுதியில் தேர்வும் எழுதாமலும், படிப்பை முடிக்காமலும் வெளியில் வருகிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
Brother Cast, Brother Movie Review

Brother Cast, Brother Movie Review

குடியிடிருக்கும் அரசு குடியிருப்பு வளாகம் கட்டி 30 வருடங்கள் ஆன நிலையில் அதனை இடிக்க அரசு நோட்டீஸ் வாங்குகிறார். ஆனால், குடியிருப்பு வாசிகளுக்கு அது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்த, அசோசியேஷன் மூலமாக அனைவரும் ஒன்று சேர்ந்து கார்த்திக்கிடம் சண்டைக்கு செல்ல கடைசியில் காவல் துறை வரை செல்கிறார். எங்கு தன்னையும் தனது மனைவியையும் நடுத்தெருவில் நிறுத்திவிடுவானோ என்று ஆதங்கத்தில் ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியரான குமாரசாமிக்கு (அச்யுத் குமார்) நெஞ்சு வலி வந்து மருத்துவனையில் அனுமதிக்கப்படுகிறார்.

37
Jayam Ravi, Priyanka Mohan, Brother Review

Jayam Ravi, Priyanka Mohan, Brother Review

இதையடுத்து ஊட்டியில் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்த கார்த்திக்கின் அக்கா ஆனந்தி மருத்துவமனைக்கு வருகிறார். மகனால் தனக்கு ஏதாவது நேர்ந்துவிடுமோ என்று பதற்றமடையும் அப்பா, கார்த்திகை ஆனந்தியுடன் அனுப்பி வைக்கிறார். அப்பாவின் நன்மைக்காவும், அக்காவின் விருப்பத்திற்காகவும் கார்த்திக் ஊட்டிக்கு செல்கிறார்.

47
Brother Movie Review

Brother Movie Review

அங்கு அட்டவணை போட்டு வாழும் அக்கா ஆனந்தியின் குடும்பத்தினரை சந்திக்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது தான் பிரதர் படத்தின் மீதிக் கதை. ஒருகட்டத்தில் சண்டையால் ஆனந்தி, தனது தம்பி கார்த்திக், மகன் அர்ஜூன் (மாஸ்டர் அஸ்வின்), மகள் அபி (விஆர் ரிதி) ஆகியோருடன் வீட்டை விட்டு செல்கிறார்.

57
Brother Twitter Review

Brother Twitter Review

அதன் பிறகு அவர்களது குடும்பம் ஒன்று சேர்ந்ததா? எதற்கெடுத்தாலும் சட்டம் பேசிக்கிட்டு இருக்கும் கார்த்திக் அதன் பிறகு திருந்தினாரா இல்லை? என்பதை குடும்பக் கதையாக சுவாரஸ்யமாக் காட்டியிருக்கிறார் இயக்குநர் எம் ராஜேஷ். குடும்பக் கதை, ஈகோ பிரச்சனைகளை மையப்படுத்தி எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும் வித்தியாசமான காட்சி, காமெடிக் கதையோடு இன்றைய தலைமுறையினருக்கு தெளிவாக காட்டியிருக்கிறார் இயக்குநர் ராஜேஷ்.

கார்த்திக் கதாபாத்திரத்தில் ஒட்டு மொத்த படத்தையும் தாங்கியிருக்கிறார் ஜெயம் ரவி. தம்பி மீது அளவுகடந்த பாசத்தில் ஒரு அப்பாவையும் மிஞ்சிய நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் பூமிகா சாவ்லா.

67
Brother Movie Review

Brother Movie Review

பூமிகாவின் கணவராக நடித்த நடராஜன் துடிப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கோபமான காட்சியாக இருந்தாலும் சரி, பாசத்தை வெளிப்படுத்தும் சரி பிரமாதமான நடிப்பு. மாமியாராக நடித்த சரண்யா பொன்வண்ணன் அந்த ரோலுக்கு கொஞ்சம் ஓவராக நடித்திருக்கிறார் என்று தோன்றுகிறது. மாமனார் ஐஏஎஸ் அதிகாரியான ராவ் ரமேஷ் கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

ஹீரோயின் பிரியங்கா மோகன் சொல்லவே வேணாம் எல்லா இடங்களிலும் பட்டைய கிளப்பியிருக்கிறார். காமெடி, ரொமான்ஸ், செண்டிமெண்ட் என்று எல்லா இடத்திலும் கிளாப்ஸ் வாங்கியிருக்கிறார். ஜெயம் ரவி மற்றும் விடிவி கணேஷ் காம்பினேஷன் பக்காவா இருக்கு. காமெடிக்கு பஞ்சமில்லை.

77
Brother Review, Jayam Ravi, Priyanka Mohan

Brother Review, Jayam Ravi, Priyanka Mohan

டாக்டராக ஒரு சீசனுக்கு வந்த எம்.எஸ்.பாஸ்கர் மனதில் நிற்கிறார். விடிவி கணேஷை வைத்து கூட்டும் அலப்பறைகள் வயிறு வலிக்க செய்கிறது. திரும்ப திரும்ப பார்க்க தோன்றும் காட்சிகள் படத்திற்கு ப்ளஸாக அமைந்துள்ளன. படம் மெதுவாக சென்றாலும் ஆழமான கருத்தை எடுத்துச் சொல்கிறது.

ஹரிஷ் ஜெயராஜ் இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. படம் முழுவதும் மக்காமிஷி பாடல் டிராவல் செய்கிறது. ஆரம்பித்த இடத்திலேயே வந்து படத்தை முடித்திருக்கிறார் இயக்குநர். படம் பக்கா மாஸ். குடும்ப சென்டிமெண்ட். பிளஸாக நிறைய விஷயத்தை சொல்லலாம். மைனஸ் என்று பார்த்தால் மெதுவாக டிராவல் பண்ணுவது தான். மொத்தத்தில் பிரதர் சுவாரஸ்யம் - இனிமை.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ஜெயம் ரவி
 
1st TEST • NZ vs IND 2026
Stumps
NZNZ
(82.0 ov)243/5
INDIND
-
Day 1
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Stumps
PAKPAK
325
SLSL
(93.0 ov) 98 & 309/9
Day 3
Schedule ›
28th T20 • WBBLT20
AS-WAS-W
Fri, 20 Nov, 2026
MR-WMR-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
29th T20 • WBBLT20
HH-WHH-W
Sat, 21 Nov, 2026
ST-WST-W
06:30 am
Match yet to begin.
Schedule ›
30th T20 • WBBLT20
SS-WSS-W
Sat, 21 Nov, 2026
PS-WPS-W
10:00 am
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Keerthy Suresh : மிஷ்கின் காலை தொட்டதால் கடுப்பானாரா கீர்த்தி சுரேஷ்? சர்ச்சைக்கு அவரே கொடுத்த செம பதிலடி
Recommended image2
Myna Nandhini : திருமண நாளில் வெளிவந்த டபுள் சர்ப்ரைஸ்.... கணவருடன் மைனா நந்தினி சொன்ன குட் நியூஸ்
Recommended image3
கிராமி விருது பந்தயத்தில் முதன்முறையாக நாமினேட் ஆன தமிழ் பாடல்... தேவன் ஏகாம்பரத்தின் வருவாய் பாட்டுக்கு குவியும் பாராட்டு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved