Atlee Son Birthday: மகனின் முதல் பிறந்தநாளை பாரிஸில்... ஸ்பெஷலான இடத்தில் கொண்டாடிய அட்லீ - பிரியா ! போட்டோஸ்
இயக்குனர் அட்லீ தன்னுடைய செல்ல மகனின் முதல் பிறந்தநாளை பாரிஸில் கொண்டாடிய நிலையில், இது குறித்த போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது.
கோலிவுட் திரையுலகில், ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் அட்லீ, பாலிவுட் திரையுலகில் கால் பதித்து அங்கும் வெற்றியை ருசித்து விட்டார். குறிப்பாக பாலிவுட் கிங் காங் ஷாருக்கானை வைத்து இவர் இயக்கிய 'ஜவான்' திரைப்படம், சுமார் 1250 கோடி மேல் வசூல் சாதனை படைத்தது.
ஜவான் படத்தின் வெற்றிக்கு பின்னர், அட்லீ-யின் அடுத்த ஹீரோ டோலிவுட் ஸ்டார் அல்லு அர்ஜுன் என கூறப்படுகிறது. அவர் தற்போது புஷ்பா 2 படத்தில் பிசியாக இருப்பதால், அட்லீ தற்போது பாலிவுட் திரையுலகில் தயாரிப்பாளராக களமிறங்கி உள்ளார். இவர் தமிழில் தளபதி விஜய்யை வைத்து முதல் முதலில் இயக்கிய 'தெறி' படம் தற்போது பாலிவுட்டில் ரீமேக் ஆக உள்ள நிலையில், இந்த படத்தை அட்லீ தயாரிக்கிறார். ஏற்கனவே அட்லீ சங்கிலி புங்கிலி கதவ தொற மற்றும் அந்தகாரம் ஆகிய படங்களை அட்லீ தயாரித்துள்ளார்.
'ஜவான்' ரிலீசுக்கு பின்னர், தன்னுடைய மகன் மீருடன் பொழுதை கழித்து வரும் அட்லீ பிரியா ஜோடி இன்று தன்னுடைய மகன் மீர் பிறந்தநாளை மிகவும் ஸ்பெஷலான இடத்தில் கொண்டாடி மகிழ்ந்துள்ளது. அதாவது மகனின் பிறந்தநாளை கொண்டாட, பாரிஸ் சென்றுள்ள பிரியா - அட்லீ ஜோடி, அங்கு குழந்தைகளின் சொர்க்கம் என அழைக்கப்படும் டிஸ்னி லாண்டில் கொண்டாடியுள்ளனர். இதுகுறித்த புகைப்படங்களை பிரியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
இந்த புகைப்படத்தை வெளிட்டு பிரியா போட்டுள்ள பதிவில், "இனிய பிறந்தநாள் எங்களின் சிறிய செல்லமே. உனக்கு ஒரு வயது என்பதை நம்பவே முடியவில்லை. கடவுள் கொடுத்த இந்த அழகான பரிசுக்காக நன்றி. உன்னை அதிகம் நேசிக்கிறேன். எங்கள் ஒட்டு மொத்த மகிழ்ச்சியாக நீ மாறி இருக்கிறார். எங்கள் அன்பான குட்டி மீருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். உன்னை அம்மாவும் - அப்பாவும் அதிகம் நேசிக்கிறோம். கடவுள் உன்னை எப்போதும் புன்னகையுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க ஆசீர்வதிக்க வேண்டும். எங்கள் அன்பான குட்டி தேவதை நீ உன்னை மிகவும் நேசிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.