குட்டி TTF ஆக மாறிய தனுஷ் மகன்.. லைசன்ஸ் இல்லாமல் பைக் ஓட்டி வசமாக சிக்கிய யாத்ரா - போட்டோவால் வெடித்த சர்ச்சை
நடிகர் தனுஷின் மூத்த மகன் யாத்ரா, லைசென்ஸே இல்லாமல் போயஸ் கார்டனில் காஸ்ட்லி பைக்கில் வலம் வந்து சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.
dhanush son yatra
தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமாகி, பின்னர் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகத்திறமையாளராக உருவெடுத்துள்ளவர் தனுஷ். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் நடிப்பில் தற்போது கேப்டன் மில்லர் என்கிற திரைப்படம் தயாராகி உள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இப்படம் வருகிற ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளது. இதுதவிர தமிழ், தெலுங்கு, இந்தி என இவர் கைவசம் அரை டஜன் படங்கள் உள்ளன.
dhanush sons yatra and linga
நடிகர் தனுஷின் சினிமா வாழ்க்கை செம்ம சூப்பராக அமைந்தாலும், அவர் தனது சொந்த வாழ்க்கையில் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்துள்ளார். இவருக்கு கடந்த 2004-ம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா உடன் திருமணம் ஆனது. இந்த ஜோடிக்கு 2006-ம் ஆண்டு யாத்ரா என்கிற ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து 2010-ம் ஆண்டு லிங்கா என்கிற மகன் பிறந்தார். இரண்டு குழந்தைகளுடன் ஜாலியாக சென்று கொண்டிருந்த தனுஷின் திருமண வாழ்க்கை கடந்த ஆண்டு முடிவுக்கு வந்தது.
Aishwarya Dhanush Sons
கடந்த ஆண்டு ஜனவரி மாதம், தனுஷும், ஐஸ்வர்யாவும் தாங்கள் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தனர். ஐஸ்வர்யா உடனான விவாகரத்துக்கு பின்னர் சென்னை போயஸ் கார்டனில் ரஜினி வீடருகே ரூ.150 கோடியில் பிரம்மாண்ட பங்களா ஒன்றை கட்டி அதில் குடியேறினார் தனுஷ். ரஜினி வீட்டில் ஐஸ்வர்யா உடன் வசித்து வரும் தனுஷின் மகன்கள் அடிக்கடி அருகில் இருக்கும் தங்களுடைய தந்தையின் வீட்டிற்கும் வந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Rajinikanth grandsons
அந்த வகையில், சில தினங்களுக்கு முன்னர் ரஜினிகாந்த் வீட்டில் இருந்து தனுஷ் வீட்டிற்கு ஆர்15 பைக்கில் சென்றிருக்கிறார் தனுஷின் மூத்த மகன் யாத்ரா. அப்போது அங்கிருந்த செய்தியாளர் ஒருவர் இதனை வீடியோ எடுத்துள்ளார். அப்போது யாத்ரா உடன் வந்த உதவியாளர் அந்த செய்தியாளாரை வீடியோ எடுக்க விடாமல் தடுத்து வாக்குவாதம் செய்துள்ளார். உடனே இது ரோடு தானே நான் வீடியோ எடுப்பேன் என்று அந்த செய்தியாளர் கேட்டவுடன் அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டார் அந்த உதவியாளர்.
dhanush son Bike riding
தனுஷின் மகனுக்கு இன்னும் 18 வயதே ஆகாத நிலையில், லைசென்ஸே இல்லாமல் அவர் போயஸ் கார்டனில் பைக்கில் சுற்றியது சர்ச்சையில் சிக்கி உள்ளது. தனுஷும், ரஜினியும் யாத்ராவுக்கு புத்திமதி சொல்ல வேண்டும் என சிலர் வலியுறுத்தி வருகின்றனர். மறுபுறம் பைக் ஓட்டி பழகினால் என்ன தவறு என தனுஷ் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். வழக்கமாக டிடிஎப் தான் பைக் ஓட்டு சர்ச்சையில் சிக்குவார். ஆனால் தற்போது தனுஷ் மகனும் அதுபோன்ற சர்ச்சையில் சிக்கி குட்டி டிடிஎப் ஆக மாறி இருக்கிறார் என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... 104 கிலோ எடை உடன் பப்ளிமாஸ் ஆக இருந்த கார்த்தி; சட்டென ஸ்லிம் ஆனது எப்படி? ஜப்பான் நாயகனின் வெயிட் லாஸ் டிப்ஸ்