104 கிலோ எடை உடன் பப்ளிமாஸ் ஆக இருந்த கார்த்தி; சட்டென ஸ்லிம் ஆனது எப்படி? ஜப்பான் நாயகனின் வெயிட் லாஸ் டிப்ஸ்
104 கிலோ உடன் எடையுடன் இருந்த நடிகர் கார்த்தி, உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியது பற்றி பேட்டி ஒன்றில் மனம்திறந்து பேசி இருக்கிறார்.
karthi, suriya
நடிகர் சிவகுமாரின் இளைய மகனான கார்த்தி, சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகும் முன்னர் உதவி இயக்குனராக பணியாற்றினார். மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய கார்த்தி, அதன்பின்னர் அமீர் இயக்கத்தில் கடந்த 2007-ம் ஆண்டு திரைக்கு வந்த பருத்திவீரன் படம் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். முதல் படத்திலேயே தன்னுடைய இயல்பான நடிப்பால் அப்ளாஸ் வாங்கி அசத்தினார் கார்த்தி.
Karthi
இதையடுத்து பையா, நான் மகான் அல்ல, ஆயிரத்தில் ஒருவன் என படத்துக்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வெற்றி கண்டார். இவர் இதுவரை 25 படங்களில் நடித்துள்ளார். இதில் பெரும்பாலானவை வெற்றிப்படங்கள் தான். குறிப்பாக இன்று டாப் இயக்குனர்களாக இருக்கும் லோகேஷ் கனகராஜ், ஹெச்.வினோத் ஆகியோருக்கு திருப்புமுனையாக அமைந்தது கார்த்தியின் படங்கள் தான். இவர் நடித்த படங்களை இயக்கி பின்னர் தான் டாப் ஹீரோக்களை இயக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Actor Karthi
தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் கார்த்தி தான் சினிமாவுக்கு வரும் முன் உடல் எடையால் சந்தித்த பிரச்சனைகள் குறித்து மனம்திறந்து பேசி உள்ளார். அதன்படி, அவர் கூறியதாவது : “நான் 104 கிலோ வெயிட் இருந்தபோது டெடி பியர் மாதிரி தான் என்னை எல்லோரும் பார்ப்பார்கள். எடையை குறைக்க ஓட ஆரம்பித்தேன். மற்றவர்களைப் போல் எனக்கு அவ்வளவு ஈசியாக உடல் எடை குறையாது.
Karthi weight loss journey
உடற்பயிற்சி செய்தும் சீக்கிரம் ரிசல்ட் கிடைக்காததால் மிகுந்த மன அழுத்தத்துக்கு உள்ளானேன். அதன்பின்னர் என்னுடைய உணவு பழக்க வழக்கங்களை மாற்றினேன். டயட்டில் கவனம் செலுத்த தொடங்கினேன். நம்முடைய உடல் 70 சதவீதம் நாம் என்ன சாப்பிடுகிறோமோ அதை பொறுத்து தான் குறையும், எஞ்சியுள்ள 30 சதவீதம் தான் ஒர்க் அவுட்டால் குறையும். இந்த புரிதல் தான் நான் கொஞ்சம் கொஞ்சமாக உடல் எடையை குறைக்க உதவியது” என கார்த்தி கூறி உள்ளார்.
இதையும் படியுங்கள்... அடடா இதவிட ஒரு பர்த்டே கிப்ட் இருக்க முடியுமா! பிறந்தநாளன்றே குழந்தை பெற்றெடுத்த சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ்