இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் நடிப்பில் உருவாகும் திரைப்படம் 'அரிசி'!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் நடிப்பில் இளையராஜா இசையில் உருவாகும் திரைப்படம் 'அரிசி' படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச்செயலாளர், முத்தரசன் விவசாயியாக நடிக்கும் திரைப்படம் 'அரிசி'. இந்த படத்தில், அவரது மனைவியாக ரஷ்யா மாயன் நடிக்கிறார். இவர்களுடன் சிசர் மனோகர், கோவி இளங்கோ, ராஜா திருநாவுக்கரசு, அர்ஜுன்ராஜ், மகிமை ராஜ்,வையகன்,அன்பு ராணி, சுபா, பழனி மணிசேகரன், கொண்டைமண்டை ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
இப்படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார், ஜான்சன் ஒளிப்பதிவு செய்ய, அசோக் சார்லஸ் எடிட்டிங் செய்கிறார். இந்த படத்தை பல இயக்குனர்களிடம் பணியாற்றிய S. A.விஜயகுமார் கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்குகிறார்.
இப்படம் குறித்து இயக்குனர் விஜயகுமார் கூறியபோது, அரிசி படம் முழுக்க முழுக்க விவசாய பின்னணியில் உருவாகும் படம். அரிசி என்பது வெறும் உணவு தானியம் மட்டும் அல்ல, மனித வாழ்வியலின் உயிர் நாடி என்பதனை இத்தலைமுறைக்கு எடுத்து சொல்வதே இந்த "அரிசி" படத்தின் சிறப்பு என்றார்.
இப்படத்தில் விவசாயியாக நடித்திருக்கும் தோழர் முத்தரசன் பேசும் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு வசனங்களும் அர்த்தம் நிறைந்ததாக இருக்கும். இப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம் பகுதியில் குடவாசல் அருகே உள்ள சிறு சிறு கிராமங்களில் 35 நாட்கள் நடந்து முடிந்திருக்கிறது. அப்பகுதி விவசாயிகளும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர் என்றார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
விவாசாயிகளின் உருவாக்கும் ஒவ்வொரு அரிசியிலும் அதற்க்கு பின்னால் உள்ள, வலியையும்... வேதனைகளையும் இப்படம் பேசும் என தெரிகிறது. இந்த படத்தை பார்த்த பின்னர் உணவை வீணாக்குபவர்கள் கூட, ஓவ்வொரு அரசியை பற்றியும் அதன் பின்னால் உள்ள வேர்வை, ரத்தம், விவசாயிகளின் ஏழ்மை குறித்து சிந்திப்பார்கள் என படக்குழு தெரிவித்துள்ளது.