இது சத்தியம்! குறிச்சு வச்சிக்கோங்க.. தளபதி 68 அப்டேட்டால் ரசிகர்களை திக்குமுக்காட வைத்த அர்ச்சனா கல்பாத்தி!
தளபதி விஜயின் 68-ஆவது படம் குறித்த, சில முக்கிய அப்டேட் நாளை வெளியாகும் என உறுதி மொழியோடு தெரிவித்துள்ளார், இப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி.
தளபதி விஜய் நடிப்பில் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி வெளியான லியோ திரைப்படம், வெளியான 4 நாட்களில் ரூ.400 கோடி வசூல் கிளப்பில் இணைந்து, பாக்ஸ் ஆபிசில் பட்டையை கிளப்பி வருகிறது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும், அணைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்த்துள்ள லியோ தொடர்ந்து, விடுமுறை நாள் என்பதால் ஒரே வாரத்தில் 600 கோடிக்கு மேல் வசூல் செய்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
=
இந்த படத்தின் வெற்றியால் படக்குழு ஒருபுறம் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கும் நிலையில், மற்றொரு புறம் ரசிகர்களும் இதனை கொண்டாடி வருகிறார்கள். இதை தொடர்ந்து, ரசிகர்களின் மகிழ்ச்சியை ரெட்டிப்பாக்கும் விஷயத்தை தான் அர்ச்சனா கல்பாத்தி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.
Thalapathy 68 Update
பிகில் படத்திற்கு பின்னர், மீண்டும் ஏஜிஎஸ் நிறுவனம் தளபதி விஜய்யை வைத்து அவரது 68-ஆவது படத்தை தயாரிக்க உள்ளது. வெங்கட் பிரபு இந்த படத்தை இயக்கி வருகிறார். ஏற்கனவே படத்தின் இயக்குனரான வெங்கட் பிரபு, லியோ ரிலீசுக்கு பின்னர்... தளபதி 68 படத்தின் அப்டேட் வெளியாகும் என தெரிவித்திருந்த நிலையில், இதுவரை தளபதி 68 படம் குறித்து மூச்சு கூட விடாமல் இருந்தனர். எனவே ரசிகர்கள் சிலர் வெளிப்படையாகவே இதுகுறித்து கேள்வி எழுப்ப துவங்கினர்.
தற்போது அர்ச்சனா கல்பாத்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், நாளை முதல் சத்தியமாக தளபதி 68 படத்தின் அப்டேட்டுகள் வெளியாகும் என அறிவித்துள்ளார். மேலும் விஜயதசமியை முன்னிட்டு, தளபதி 68 படத்தின் பூஜை வீடியோ நண்பகல் 12.05 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பூஜை கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி போடப்பட்டு, படத்தின் ஷூட்டிங் முழு வீச்சில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
புதிய கீதை படத்திற்க்கு பின்னர் யுவன் ஷங்கர் ராஜா தளபதியின் படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் ஜெய், அபர்ணா தாஸ், பிரபுதேவா, வைபவ், லைலா, பிரசாந்த், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர். விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D