6 மாசம் அட்ஜஸ்ட்மென்டுக்கு டீல் பேசிய இயக்குனர்! ஓகே சொன்ன நடிகைகள் 'பாண்டியன் ஸ்டோர்' லாவண்யா ஓப்பன் டாக்!
'பாண்டியன் ஸ்டோர்' சீரியல் நடிகை லாவண்யாவிடம் காஸ்டிங் இயக்குனர் ஒருவர் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லி 6 மாதம் டீல் பேசியது பற்றி பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார்.
Lavanya
சமீப காலமாக சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் பலர், தங்களிடம் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய கூறி அணுகும் சிலரது உண்மை முகங்களை, வெளிப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது, 'பாண்டியன் ஸ்டோர்' சீரியல் நடிகை லாவண்யா தன்னிடம் 6 மாதம் அட்ஜஸ்ட்மென்டுக்கு டீல் பேசிய காஸ்டிங் இயக்குனரின் முகத்திரையை கிழித்துள்ளார்.
Lavanya
கோயம்புத்தூரை சேர்ந்த லாவண்யா, சென்னையில் உள்ள SRM கல்லூரியில் தான் படித்து முடித்தார். படித்து முடித்ததுமே இவருக்கு, கை நிறைய சம்பளத்துடன் பேங்கில் வேலை கிடைத்த நிலையில், சிறு வயதில் இருந்தே நடிகையாக வேண்டும் என்கிற ஒரு கனவு இவருக்கு இருந்ததால், வீட்டுக்கே தெரியாமல் சில மாடலிங் போட்டோ ஷூட் மற்றும் விளம்பரங்களில் நடிக்க துவங்கியுள்ளார்.
Lavanya
இதுபற்றி வீட்டில் தெரிய வர, மிகப்பெரிய பூகம்பமே வெடித்துள்ளது. பின்னர் மெல்ல மெல்ல வீட்டில் உள்ளவர்களை சமாதானப்படுத்தி சீரியலில் நடிக்க துவங்கியுள்ளார். அந்த வகையில் இவர் முதல் முதலில் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சிப்பிக்குள் முத்து' சீரியல் மூலம் தான் அறிமுகமானார்.
Lavanya
இந்த சீரியல் முடிந்த பின்னர், பாண்டியன் ஸ்டோர் சீரியலில் சித்ரா இறந்த பின்னர் அவரின் கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆன, காவ்யா அறிவுமணி விலகியதும் லாவண்யா உள்ளே வந்தார்.
Lavanya
இவரின் நடிப்புக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சீரியலை தாண்டி திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ள இவர், ஆஹா ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகும் வேற மாறி ஆபீஸ் என்கிற வெப் தொடரிலும் நடித்து வருகிறார்.
Lavanya
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர், பேட்டி ஒன்றில் பேசிய லாவண்யா, தன்னை தொடர்பு கொண்ட காஸ்டிங் இயக்குனர் ஒருவர் சில வாய்ப்புகள் வழங்குவதாக கூறி, தன்னிடம் கனெக்ட்டில் இருக்கும்படி கூறினார்.
Lavanya
மேலும் அவர் 6 மாதம் ஒன்றாக இருப்போம், அதுக்கு மேல் வேண்டாம். அந்த மாதிரி என்கூட இருந்த நீ பெரிய லெவலுக்கு வந்து விடுவாய். மீடியாவில் வேலை செய்த மூன்று நடிகைகள், என்னுடன் தொடர்பு ஏற்பட்ட பின்னர் முன்னணி இடத்திற்கு வந்து வீடு கார் என செட்டில் ஆகிவிட்டனர் என்று அந்த நபர் கூறியதாகவும், இதற்க்கு லாவண்யா அவரின் பேச்சுக்கு எந்த பதிலும் கூறாமல் அமைதியாக இருந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
Lavanya
நான் அந்த காஸ்டிங் இயக்குனரை முறைத்து கொண்டு என் பெயரை கெடுத்து கொள்ள விரும்பவில்லை என்று லாவண்யா கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D