சன் டிவி பிரைம் டைம்.. சூப்பர் ஹிட் சீரியலில் இருந்து அதிரடியாக விலகும் கதாநாயகி! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், சூப்பர் ஹிட் சீரியலில் நடித்து வரும் கதாநாயகி அதிரடியாக இந்த சீரியலில் இருந்து விலக உள்ளதாக வெளியாகியுள்ள தகவல், ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.
சன் டிவியில், கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் 'நான் பார்த்தத்திலே அவள் ஒருத்தியை தான்' என தொடங்கும் தீம் பாடலுடன் துவங்கிய சீரியல் 'அன்பே வா'.
திங்கள் முதல் சனி வரை பிரைம் டைமான இரவு 10:30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சீரியலில், விராட் (வருண் கிருஷ்ணா) கதாநாயகனாகவும், டெலினா டெவிஸ் (பூமிகா) கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்கள்.
இந்த சீரியலை, முதலில் பிரின்ஸ் இமானுவேல் இயக்கி வந்தார், இதை தொடர்ந்து செல்வம், சேலம் சிவா, என பல இயக்குனர்கள் மாறிய நிலையில், தற்போது ராஜேந்திரன் என்பவர் இயக்கி வருகிறார். சுமார் 900 எபிசோடுகளை கடந்து 'அன்பே வா' சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
delnadevies
இந்த சீரியல் மூலம் தனக்கென ரசிகர்கள் மத்தியில் தனி ரசிகர்கள் கூட்டத்தையே உருவாகியுள்ள டெலினா டெவிஸ் தற்போது இந்த சீரியலில் இருந்து அதிரடியாக வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கான உண்மை காரணம் என்ன என்பது இதுவரை வெளியாகவில்லை.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்த சீரியலில் பிரபல தயாரிப்பாளர் ரவீந்தரின் இரண்டாவது மனைவியான மஹாலட்சுமி இந்த சீரியலில் தான் நடித்து வருகிறார். இந்த சீரியலில் இருந்து கதாநாயகி விலகுவதால், விரைவில் புதிய கதாநாயகி குறித்த அறிவிப்பு வெளியாகி என எதிர்பார்க்கப்படுகிறது.