Meena: மீனாவை அட்ஜஸ்ட் பண்ணி நடிக்க சொன்ன தயாரிப்பாளர்.! மகளுக்காக முடியாதுனு சொன்ன படம் எது தெரியுமா?
மீனா குழந்தையை வைத்து கொண்டு நடிக்க முடியாது என மறுத்த நிலையில், அவரை எப்படியாவது கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி நடித்து கொடுங்கள், என தயாரிப்பாளர், அடம் பிடித்து சூப்பர் ஹிட் படத்தில் நடிக்க வைத்த தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார்.
தென்னிந்திய திரையுலகில், 1982 ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான 'நெஞ்சங்கள்' என்ற திரைப்படத்தின் மூலம், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் அன்புள்ள ரஜினிகாந்த் என்ற திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் மீனா. இதை தொடர்ந்து சுமார் 20க்கும் மேற்பட்ட படங்களில் சைல்டு ஆர்டிஸ்ட்டாக நடித்த இவர், தன்னுடைய 14 வயதிலேயே கதாநாயகியாக மாறினார்.
தெலுங்கில் 1990 ஆம் ஆண்டு வெளியான 'நவயுகம்' என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமான இவர், தமிழில் 'புதிய கதை' என்கிற படத்தின் மூலம் நாயகியாக மாறினார். இதை தொடர்ந்து நடிகர் ராஜ்கிரணுக்கு ஜோடியாக 'என் ராசாவின் மனசிலே' திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்த சோலையம்மா கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றாலும், தமிழில் இவரை முன்னணி நடிகையாக மாற்றியது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்த எஜமான் திரைப்படம்தான்.
இந்த படத்திற்கு பின்னர், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். குறிப்பாக, தமிழில் ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், அர்ஜுன், அஜித், உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். வெள்ளித்திரை வாய்ப்புகள் குறைய துவங்கியதும் சின்னத்திரைக்கு தாவிய மீனா, கடந்த 2009 ஆம் ஆண்டு, பெங்களூரை சேர்ந்த வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நடித்து வந்த மீனா, தன்னுடைய மகள் நைனிகா பிறந்த பின்னர் தற்காலிகமாக திரையுலகில் இருந்து விலகினார். அந்த சமயத்தில் தான், மலையாளத்தில் இயக்குனர் ஜீத்து ஜோசப் நடிப்பில் உருவாக இருந்த 'திருஷ்யம்' திரைப்படத்தில் மீனாவை நடிக்க வைக்க தயாரிப்பாளர் அணுகியுள்ளார்.
இதற்க்கு மீனா, தன்னுடைய மகனுக்கு 2 வயது மட்டுமே ஆவதாக கூறி, பட வாய்ப்பை நிராகரித்துள்ளார். இதற்க்கு தயாரிப்பாளர்... உங்களை தவிர இந்த காதாபாத்திரத்தில் யாரையும் என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை. எனவே கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி நடிங்க, உங்களுக்கு என்ன வசதிகள் வேண்டும் என்றாலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் செய்து தருகிறேன் என கூறியுள்ளார். இதை தொடர்ந்தே... இந்த படத்தில் நடித்ததாக மீனா கூறியுள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D