Keerthy Suresh: அரசியலில் குதிக்கிறாரா கீர்த்தி சுரேஷ்? MLA நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டோஸ் வைரல்!
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பை தாண்டி, கேரளாவில் எம்.எல்.ஏ அன்வர் சதாத் நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், வாரிசு நடிகை என்கிற அடையாளத்தோடு மலையாள திரையுலகில் குழந்தை அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாகவும் மாறினார். தமிழில் இவர் அறிமுகமான 'இது என்ன மாயம்' திரைப்படம் படுதோல்வியை சந்தித்தாலும், இதை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த, 'ரஜினி முருகன்' தாறுமாறு ஹிட்டடித்தது.
அடுத்தடுத்து தனுஷுக்கு ஜோடியாக தொடரி, மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரெமோ, விஜய்க்கு ஜோடியாக பைரவா, சர்க்கார், விக்ரமுக்கு ஜோடியாக சாமி, போன்ற பல படங்களில் நடித்தார். சில படங்களில் இவரது தோற்றம் மற்றும் சிரிப்பு போன்றவை விமர்சனங்களுக்கும் ஆளானது.
Samantha: நடிகை சமந்தா குடும்பத்தில் இணைந்த புதிய நபர்..! அன்பு மழை பொழிந்த புகைப்படம் வைரல்..!
தனக்கு எதிரான விமர்சனங்களை தகர்க்கும் விதத்தில், இவர் நடித்த மகாநடி கதாபாத்திரம் கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருதை பெற்று தந்தது. இதை தொடர்ந்து பெரும்பாலும் கதாநாயகிக்கு முக்கியத்தும் கொடுக்கும் படங்களையும் தரமான கதைகளையும் தேர்வுசெய்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் அதிரடியாக அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு, பதிவிட்டுள்ளதாவது... "அலைவ்" என்பது கேரளாவின் ஆலுவாவில் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்தும், எம்.எல்.ஏ அன்வர் சதாத்தால் உயிர்ப்பிக்கப்பட்ட ஒரு லட்சியத் திட்டமாகும். இத்திட்டத்தின் முன்முயற்சியாக, அனைத்து பாடத்திட்டங்களிலும் பரீட்சைகளில் A+/A1 பெற்ற 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். பல்வேறு இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளில் ரேங்க் பெற்றவர்கள் மற்றும் நூற்றுக்கு நூறு தேர்ச்சி பெற்ற பள்ளிகளும் கவுரவிக்கப்பட்டனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்த மதிப்புமிக்க நிகழ்வின் ஒரு பகுதியாக இருந்ததில் நான் பெருமை அடைகிறேன். வந்த அற்புதமான மாணவர்களுடன் உரையாடி, வரும் தலைமுறையிலிருந்து உலகம் இன்னும் பல அதிசயங்களைக் காணும் என்று எனக்கு உறுதியளித்தார் என கூறியுள்ளார்".